Top Ad unit 728 × 90

கர்ப்பிணி மனைவியை நெருப்பு வைத்து கொளுத்திய கணவன்!என்ன காரணம் தெரியுமா?

இத்தாலியில் நபர் ஒருவர் தமது மனைவி பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து அவரை நெருப்பு வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் ஃபார்மியா எனும் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. 42 வயதான Polo Pietropaolo என்பவரின் மனைவி கார்லா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையேயான வாக்குவாதத்தின்போது கார்லா கூடிய விரைவில் தாம் வேறொரு திணை தேடிச் செல்ல இருப்பதாகவும், வாழ்க்கை வெறுமையாக கடந்து செல்ல தம்மால் அனுமதிக்க முடியாது எனவும் தமது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த பாலோ, அழகான முகவும் வடிவான உடலும் இருப்பதால் தானே தம்மை விட்டு வேறு துணை தேடிச் செல்கிறாள், அந்த அழகை அழித்து விடுகிறேன் என வன்மம் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கார்லா மீது நெருப்பு வைத்து அவரது முகத்தை சிதைக்க முயற்சித்துள்ளார். இந்த கொலை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் கார்லா.

குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த பொலிசார் நீண்ட நீதிமன்ற விசாரணையின் பின்னர் பாலோவுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளனர். மட்டுமின்றி கார்லா பெற்றெடுத்துள்ள குழந்தையை பார்க்கவோ சொந்தம் கொண்டாடவோ பாலோவுக்கு அனுமதியும் மறுத்துள்ளனர்.

கூடவே கார்லா மீது மேற்கொண்ட இந்த கொடூர தாக்குதலுக்கு அபராதமாக 250,000 யூரோ (இலங்கை மதிப்பில் ரூ.393,498,62 கோடி) தொகை வழங்க வேண்டும் எனவும், குழந்தைக்கு 50,000 யூரோ வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்ப்பிணி மனைவியை நெருப்பு வைத்து கொளுத்திய கணவன்!என்ன காரணம் தெரியுமா? Reviewed by Unknown on 5:22:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.