Top Ad unit 728 × 90

“மாவீரர் நாளை மக்கள் நினைவு கூர்வதை ஏன் சிங்களம் தடுக்கவில்லை? ஒரு ஆய்வு..

“மாவீரர் நாளை மக்கள் நினைவு கூர்வதை ஏன் சிங்களம் தடுக்கவில்லை?” இதுதான் இன்று எல்லோரையும் குடையிற கேள்வியாக இருக்கிறது.

பலர் தமது துறை சார்ந்து பல காரணங்களை அடுக்கினாலும் 2009 இற்கு பிறகு ஒவ்வொரு மே 18 மற்றும் மாவீரர் நாள் நிகழ்வின் பின்னான மக்கள் உளவியலை ஓரளவிற்கேனும் எடைபோட்டு அதை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கும் எமக்கு என்று இது தொடர்பாக ஒரு வாசிப்பு இருக்கிறது.

கடந்த முறைகளுடன் ஒப்பிடும் பொழுது மக்களும் மாணவர்களும் “அதை எப்படியாவது அனுஸ்டித்து விட வேண்டும் ” என்ற ஒரு மூர்க்கமான மனநிலைக்கு சென்றுள்ளதை அவதானிக்க முடிந்தது. எத்தனை காலம்தான் பொறுக்க முடியும்?

சிங்களமும் அதை தெரிந்து வைத்துள்ளது.

ஏனென்றால் தடுத்தால் மறு பேச்சுக்கு இடமின்றி அடிவிழ வாய்ப்புள்ள அளவிற்கு மக்களின் – மாணவர்களின் மனநிலை வந்துள்ளதை கணித்திருக்கிறார்கள்.

அதனால்தான் இந்த மவுனம்.

கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒரு வெற்றியாக புலிகளை அழித்து படிப்படியாக கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு சூழலை ஒரே நாளில் தமிழர்களுக்கு சார்பாக மாற்றிவிட சிங்களம் தயாராக இல்லை.

மக்களை – மாணவர்களை தடுத்தால் அது ஒரு புரட்சிக்கு வித்திட்டதாக போய் முடியும் என்று அவர்களுக்கு தெரியும்.

ஏனைய காலங்களை விட மாவீரர் வாரத்தில் மக்களின் மனநிலை போர்க்குணத்துடன் கூடிய கூட்டு உளவியலாக படிந்து எதையும் எதிர் கொள்ளும் மனநிலைக்கு வந்து சேர்ந்துவிடும்.

அதை நுட்பமாக கணித்து மவுனம் காத்து களத்தை தொடர்ந்து தமக்கு சார்பாக வைத்திருக்கிறது சிங்களம். ஆனால் இது தொடர்ந்து சாத்தியமல்ல.

மக்கள் ஒரு நாள் களத்தை முழுமையாக தம் வசம் திருப்புவார்கள். அதற்கான ஒரு எதிர்வுகூறல்தான் இது.

சிங்களம் இந்த மவுனத்தை நல்லாட்சி, நல்லிணக்கம் என்ற போர்வையில் அரை குறை தீர்வை திணிக்கவும், அனைத்துலக தலையீட்டை தடுக்கவும் நிறையவே பயன்படுத்தும்.

ஆனால் முதல் தடவையாக களத்தின் மீதான தன்பிடியை மெல்ல மெல்ல பறிகொடுக்க தொடங்கியிருக்கிறது. இந்த மாவீரர் நாளின் செய்தி இதுதான்.

இது நம் மக்கள் நடத்திய சாதனை -அதை சாத்தியப்படுத்தியது மாவீரர்களின் ‘ஆன்மா’.
“மாவீரர் நாளை மக்கள் நினைவு கூர்வதை ஏன் சிங்களம் தடுக்கவில்லை? ஒரு ஆய்வு.. Reviewed by Unknown on 9:18:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.