Top Ad unit 728 × 90

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விபரங்களை தர சுவிஸ் அரசு ஒப்புதல்!

சுவிற்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விபரங்களை இந்திய அரசுக்கு தர சுவிற்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த எட்டாம் திகதி முதல் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது. அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனிடையில் சுவிற்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்களுக்கு உள்ள கணக்குகளையும், கணக்கு வைத்துள்ளவர்களின் விபரங்களையும் தர அந்நாட்டு அரசு சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அதன்படி வரும் 2018 ஆம் ஆண்டிலும் அதை தொடர்ந்து வரும் வருடங்களிலும் சுவிற்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரின் விபரங்களை இந்தியாவுக்கு தர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியர்களின் வைத்துள்ள பணம் மூன்றில் ஒரு பகுதி தற்போது வெகுவாக குறைந்துள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வரும் காலத்தில் சுவிஸ் பேங்கில் பணம் வைத்துள்ளவர்களின், முக்கியமாக பெரும் புள்ளிகள் விபரம் தெரியவரும்.
சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விபரங்களை தர சுவிஸ் அரசு ஒப்புதல்! Reviewed by Unknown on 6:28:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.