Top Ad unit 728 × 90

கனடா HSBC வங்கியில் ரூ.44 கோடி பணத்தை ஆட்டைய போட்ட ஊழியர் கைது!

கனடா நாட்டில் HSBC வங்கியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் ரூ.44 கோடி வரை பணமோசடி செய்தது அம்பலமானதை தொடர்ந்து அவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த Theodore Glade(61) என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் குடியேறி எட்மோண்டன் நகரில் வசித்து வந்துள்ளார்.

இவரும் இவரது முன்னாள் மனைவியான Edmund Leonardo(59) என்பவரும் HSBC எட்மோண்டன் கிளை வங்கியில் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2004 முதல் 2008 ஆகிய 5 ஆண்டுகள் பல்வெறு பணமோசடிகளில் இருவரும் ஈடுப்பட்டுள்ளனர்.

அதாவது, வங்கியில் டெபாஸிட் செய்யப்பட்ட பணத்தை தனது மற்றும் தனது மனைவியின் கட்டுப்பாட்டில் இருந்த ரகசிய கணக்குகளுக்கு மாற்றி பணமோசடி செய்துள்ளனர்.

இந்த 5 ஆண்டுகளில் மட்டும் இருவரும் 3 மில்லியன் டொலர்(44,56,80,000 இலங்கை ரூபாய்) வரை மோசடி செய்துள்ளது அம்பலமானதை தொடர்ந்து பணியில் இருந்து விலகிய ஊழியரை பொலிசார் கடந்த நவம்பர் 2-ம் திகதி கைது செய்தனர்.

ஆனால், இவருடன் தங்கியிருந்த அவரது முன்னாள் மனைவி தற்போது தலைமறைவாக பதுங்கியுள்ளார்.

மேலும், இவரை பிடிக்க நாடு முழுவதும் பிடிவாரண்ட் பிறபித்துள்ள நிலையில், Edmund Leonardo குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு காவல் துறை கோரிக்கை விடுத்துள்ளது.
கனடா HSBC வங்கியில் ரூ.44 கோடி பணத்தை ஆட்டைய போட்ட ஊழியர் கைது! Reviewed by Unknown on 6:03:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.