நாளை ஆரம்பமாகின்றது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை : 7 இலட்சம் மாணவர்கள் தோற்றவுள்ளனர்
நாளை ஆரம்பமாகவுள்ள சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி வரைக்கும் நடத்தப்படவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 65 ஆயிரத்து 524 ஆசிரியர்கள் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியூ .ஜே புஷ்பகுமார ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
க.பொ.த (சாதாரண தர) பரீட்சை நாளை செவ்வாய்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை 7 இலட்சம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன் 5669 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதற்கான ஏற்பாடு பூர்த்திய செய்யப்பட்டுள்ளன.
நாளை ஆரம்பமாகவுள்ள சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி வரைக்கும் நடத்தப்படவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 65 ஆயிரத்து 524 ஆசிரியர்கள் கடமையில் ஈடுப்படுத்தவுள்ளனர்.
கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் 8 மணிக்கு முன்பு பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும். பரீட்சை நிலையத்திற்கு வரும் மாணவர்கள் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுசீட்டு கொண்டு வர வேண்டியது கட்டாயமாகும். பரீட்சைக்கு வரும் போது பரீட்சை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சரியாக உள்ளதாக என்பதனை சரிபார்த்து கொள்ள வேண்டும். தாம் விண்ணப்பித்த விடயதானங்கள், பரீட்சை நிலையங்கள், பழைய அல்லது புதிய பாடத்திட்டம் போன்ற அம்சங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
பரீச்சார்த்தர்கள் பரீட்சை நிலையத்திற்கு கையடக்க தொலை பேசி பாவனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பரீட்சையின் போது மோசடிகள் முற்றாக தடை விதிக்கப்படுவதுடன் , மோசடிகளில் ஈடுப்படும் மாணவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும். மோசடிகளில் ஈடுப்படும் மாணவர்கள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்திற்கு முறையீடு செய்ய முடியும்.
பரீட்சை சம்பந்தப்பட்ட முறையீடுகள் தொடர்பில் கண்காணப்பதற்கு விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாகாண மற்றும் வலய பரீட்சை நிலையங்களுக்கான கண்காணிப்பு குழு தற்போது தயார் நிலையில் உள்ளது.
ஏதாவது பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறு நபர் பரீட்சைக்கு தோற்றுவதனை கண்டறிந்தால் உடனே பரீட்சை நிலையத்தில் வைத்தே குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்படுவர்.
பரீட்சை தொடர்பில் மேலதிக தகவல்களையோ அல்லது முறையீடுகள் செய்வதாயின் கீழ் வரும் தொலைபேசி இல்லங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
பரீட்சை திணைக்களத்தின் பிரிவு இலக்கம் 1911, பாடசாலை பரீட்சை செயற்பாட்டு பிரிவு 011 2784208,011 2784537 ,0113188350,0113140314 ஆகிய தொடர்பு கொள்ள முடியும். பொலிஸ் தலைமையகத்திற்கு தொடர்பு கொள்வதாயின் 0112421111 அல்லது பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119 க்கு தொடர்பு கொள்ள முடியும்.
நாளை ஆரம்பமாகின்றது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை : 7 இலட்சம் மாணவர்கள் தோற்றவுள்ளனர்
Reviewed by Unknown
on
12:27:00 AM
Rating:
கருத்துகள் இல்லை: