முதல்வர் ஜெயலலிதா இறந்தது உண்மையா? கட்டுக் கதையா! உண்மை நிலவரம்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா (வயது 68) காலமானார்.
சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.
கடந்த செப்டம்பர் 22-ந் தேதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.
75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலையில் மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்தார்.
இதற்கிடையே திங்கlட்கிழமை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில் இன்று மாலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அப்போலோ மறுப்பு
எனினும் இன்று மாலை 05-49 மணிக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா காலமாகி விட்டதாக வெளிவந்த தகவலையடுத்து தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்ட போதிலும் பின்னர் அது இறக்கப்பட்டு தேசியக்கொடி மீண்டும் பறக்கவிடப்பட்டது.
மதிழக முதல்வர் காலமாகினார் என்ற தகவலை உத்தியோகபூர்வமாக வெளியிடாத நிலையில் அது குறித்து வெளிவந்த வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவர் மரணமானார் என்ற செய்தியை தமிழக ஆளுநர் மட்டுமே அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வெளியிடவுள்ள அறிக்கையே உத்தியோகபூர்வமானது எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதா இறந்தது உண்மையா? கட்டுக் கதையா! உண்மை நிலவரம்!
Reviewed by Unknown
on
5:02:00 AM
Rating:
Reviewed by Unknown
on
5:02:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: