Top Ad unit 728 × 90

வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற முடியாது !அமைச்சர் மஹிந்த சமரசிங்க..

இறுதி யுத்தத்தின் போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சரணடைந்த முறையான புனர்வாழ்வு அளிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் வடக்கில் இருந்து இராணுவத்தினரை முற்றாக வெளியேற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றவே முடியாது எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவு திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு மற்றும் கிழக்கில் எவ்வளவு படையினர் இருக்க வேண்டும் என்பதை பாதுகாப்புச் சபையே தீர்மானிக்கும். வேறு எவராலும் தீர்மானிக்க முடியாது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் 12000 முன்னாள் போராளிகள் சரணடைந்தனர். அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கூறியதைப் போன்று முன்னாள் போராளிகள் அனைவரையும் கடந்த அரசாங்கம் சரிவர புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

எனினும், அத்தனை முன்னாள் போராளிகளையும் சமூகமயப்படுத்தினோம். இன்று அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்..? என்பது குறித்த தகவல் இல்லை.

இவ்வாறான சூழ்நிலை இருக்கும்போது வடக்கிலிருந்து எவ்வாறு இராணுவத்தினரை வெளியேற்றுவது…? நமது நாட்டின் பாதுகாப்பு உச்ச அளவில் இருப்பது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற முடியாது !அமைச்சர் மஹிந்த சமரசிங்க.. Reviewed by Unknown on 9:20:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.