முச்சக்கரவண்டி ஒன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளை பேருந்துடனும் மோதி சிதறிய சம்பவம்!
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஹொரவப்பொத்தானை வீதியில் இருந்து கண்டி வீதி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து தடம்புரண்டது.
இதன்போது எதிரில் வந்த சாயி சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான பேருந்துடனும் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நவநீதராசா (வயது45), மரியதாஸ் (65) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
முச்சக்கரவண்டி ஒன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளை பேருந்துடனும் மோதி சிதறிய சம்பவம்!
Reviewed by Unknown
on
5:37:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:37:00 PM
Rating:


கருத்துகள் இல்லை: