Top Ad unit 728 × 90

சின்னத்திரை நடிகர்கள் தற்கொலைக்கு பின்னால் உள்ள சதி அம்பலம்!

 சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்து கொள்வது தற்போது அதிகரித்துள்ள நிலையில் அதற்கான காரணத்தை சின்னத்திரை நடிகர் சங்கத்தின் செயலாளர் போஸ் வெங்கட் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, என்னைப் பொறுத்தவரை தான் ஒரு நடிகன் என்கிற அங்கீகாரத்தை தலையில் ஏற்றிக் கொள்வதால் தான் தற்கொலைகள் நடக்கிறது.

நான் சீரியல்ல இருந்து சினிமாவுக்கு வருவதற்கு 3 வருஷம் ஆச்சு. அந்த 3 வருஷமும் நான் எந்த தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கவில்லை. அந்த நேரத்தில் நான் எல்லா வேலையும் பார்த்தேன்.

ஆனால், இப்போ இருக்கிற சிலர் ஒரு சில நாடகங்களில் நடித்து பேமஸ் ஆனதும் வெளியில் தன் முகத்தை காட்டிக்கொள்ள மறுக்கிறார்கள். பைக்ல போனவங்க கார்ல போக நினைக்கிறாங்க.

பக்கத்துல கடைக்கு போகக்கூட தயங்குறாங்க. ஏன்னா, தான் ஒரு பிரபலமான நடிகன், நான் எப்படி அதை பண்ண முடியும்னு நினைக்கிறாங்க. அப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் சிலர் தான் அகல கால் வச்சு பல செலவுகளை இழுத்துப் போட்டுக்கிட்டு, வாய்ப்பு கிடைக்காமல் போன பின்னர் அந்த கடன்களை எல்லாம் அடைக்க முடியாம தற்கொலை பண்ணிக்க முடிவு எடுக்குறாங்க.

என்னைக்குமே ஒரு நடிகர் நடிப்பை இரண்டாவதாக தான் வைக்கணும். வேற ஒரு வேலையை முதலாக வைத்துக்கொண்டால் தான் நல்லது.

அதுமட்டுமன்றி, நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காதது ஒரு புறம் இருந்தாலும், சொந்த பிரச்சனைகள் காரணமாகவும் சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகர்கள் தற்கொலைக்கு பின்னால் உள்ள சதி அம்பலம்! Reviewed by Unknown on 5:48:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.