பொலிஸாரே பொலிஸிடம் கப்பம் வாங்கிய சம்பவம்-வவுனியாவில் பதிவாகியுள்ளது!
வவுனியாவில் பணியாற்றும் பொலிஸார் சிலரின் ஒக்டோபர் மாதச் கொடுப்பனவில் மேலதிகமாக பணம் அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் பலர் பொலிஸ் திணைக்களத்தின் அனுமதியுடன் தமது மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்தே கடமைக்கு செல்கின்றனர்.
இவர்கள் தமது வீட்டிலேயே உணவினையும் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் கடந்த ஒக்டோபர் மாதத்திற்குரிய கொடுப்பனவில் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து சாப்பிட்டவர்களுக்கும், பொலிஸ் உணவகத்தில் உணவு பெற்றதாக கூறி பலரிடம் கட்டணங்கள் அறவிடப்பட்டுள்ளது.
1000 ரூபாய் தொடக்கம் 3000 ரூபாய் வரை இவ்வாறு அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுமார் 100 பேர் வரையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட தமக்கு தமது பணத்தை மீளப்பெற உதவ வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Reviewed by Unknown
on
11:13:00 PM
Rating:
Reviewed by Unknown
on
11:13:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: