Top Ad unit 728 × 90

சவுதிக்கு பணிப்பெண்ணாக வேலைக்கு சென்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் எந்த சம்பளமும் இன்றி மீண்டும் நேற்று நாடு திரும்பியுள்ளார்.

மஸ்கெலியா பகுதியை சேர்ந்த 40 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய் ஒருவரே, இரண்டு வருடமாக சவுதி அரேபியாவில் வேலை செய்து இவ்வாறு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

குறித்த பெண் தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் உள்ள முகவர் ஒருவரின் மூலமாக 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பணிப்பெண்னாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார்.

குறித்த முகவர் அந்த பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது 35 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கியே அனுப்பி வைத்துள்ளார்

வெளிநாடு சென்ற பெண்ணின் பிள்ளைகளில் மூத்த மகள் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கல்வி பயில்கின்றார் என்றும் குறித்த பெண்ணின் தாயின் பாதுகாப்பின் கீழ் குழந்தைகள் மூன்றும் வளர்ந்து வந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் தொடர்பில் எவ்வித தகவல்களும் அறியாமல் தனது உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சென்று முறைப்பாடு செய்ததன் பின்னர் ரியாத் நகரில் உள்ள தூதரகத்தின் அதிகாரிகள் அந்த நாட்டு பொலிஸாருடன் சென்று குறித்த வீட்டு உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
இரண்டு வருடமாக சவுதி அரேபியாவில் பணியாற்றிய குறித்த பெண்ணுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

சவுதிக்கு பணிப்பெண்ணாக வேலைக்கு சென்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி! Reviewed by Unknown on 6:10:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.