Top Ad unit 728 × 90

இந்து மத குரு ஒருவர் பௌத்த பிக்குவாக மாறும் சம்பவத்தால் பரபரப்பு!

இந்து மத குரு ஒருவர் பௌத்த பிக்குவாக துறவு பூணுகின்றார்.

பலாங்கொடை பிரதேசத்தில் இந்த விநோத நிகழ்வு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 16ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு பலாங்கொடை, மண்டாவெல ஸ்ரீ சுதர்மாராம விஹாரையில் நடைபெறவுள்ளது.

பலாங்கொடை பின்னவல புதுக்காடு கோயிலில் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்து ஆலய பூசகராக கடமையாற்றி வந்த மகேந்திரன் சர்மா என்ற இந்து மத குருவே இவ்வாறு பௌத்த பிக்குவாக துறவு பூணுகின்றார்.

ஜாதக கதைகள், பௌத்த புராணங்கள் உள்ளிட்ட பலவற்றையும் அவர் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மத குரு, பௌத்த விஹாரைகளில் பல்வேறு பௌத்த மதப் போதனைகளை ஆற்றியுள்ளார்.

பொகவந்தலாவை ஹட்டன் வீதியில் வசித்து வரும் சுப்பிரமணியம் மற்றும் சரோஜாதேவி ஆகியோரின் புதல்வரே இந்த மகேந்திரன் சர்மா என்ற இந்து மத குரு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து மத குரு ஒருவர் பௌத்த பிக்குவாக மாறும் சம்பவத்தால் பரபரப்பு! Reviewed by Unknown on 7:25:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.