Top Ad unit 728 × 90

ஜெயலலிதா கை ரேகையில் சிக்கல்??

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப்பின் முழு உலகத்திலும் அம்மாவின் தேக நிலைப்பற்றிய பல்வேறுபட்ட வதந்திகளும் முரன்பாடான கருத்துக்களும் வெளிவந்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரின் தேக நிலையைபற்றிய திடுக்கிடும் தகவல்களும் வெளியிடப்பட்டே வந்தது.
அக்காலப் பகுதியிலேயே சில தமிழக மாவட்டங்களில் இடைத்தேர்தலுக்கான வேற்பு மனு தாக்களும் இடம் பெற்று தேர்தல்களில் அம்மாவின் அ.தி.மு.க வெற்றியும் பெற்றது.
இந்த வேற்பு மனுவில் அம்மா பொது செயலாளர் என்றவகையில் வேற்பாளர்களின் வேற்பு மனுவில் கையொப்பம் இடுவது அவசியமானதாக இருந்த போதும் அம்மாவின் பெருவிரல் ரேகையின் மூலம் அந்த வேற்புமனுக்களில் வேற்பாளர்களின் பெயர் பட்டியல்களை தேர்தல் தினைக்களம் ஏற்றுக்கொண்டதும் சகலரும் அறிந்த விடயமே.
இருப்பினும் தற்போது அம்மாவின் மரணம் சம்பந்தமாக பரவிவரும் தகவல்களைப்பார்க்கும் போது அவரின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவே மக்களுக்கு வலுவான சந்தேகங்கள் ஏற்பட்டுவிட்டது.
இதன் காரணமாக வே அம்மாவின் கை ரேகையை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின் அப்பொழுது அந்த கைரேகையை பெறும்போது இந்த கை ரேகை அம்மாவின் கை ரேகைதான் என ஓர் பொருப்பு வாய்ந்த நாடு ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர் அதிகாரி அதை உறுதிபடுத்த வேண்டியது மிக முக்கியமாகும் அப்போதுதான் அதை சட்டரீதியான ஆவனமாக ஏற்றுக்கொள்ள முடியும்.
அப்படி கை ரேகையை உறுதிபடுத்தியவர் முன்னிலையிலேயே அம்மாவின் கையொப்பம் பெற்றிருக்கப்படல் வேண்டும் அப்படி நடைபெற்றதாக எந்தவிதமான செய்திகளையும் நாம் இதுவரை அறியவில்லை.
அம்மா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற காலப்பகுதியில் அம்மாவை சசிகலாவை தவிர வேறு யாரும் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை என்பதே உண்மையான நிலையாகும் அந்த சூழ்நிலையில் அந்த கை ரேகை அம்மாவின் கைரேகைதானா என்பதை யார் உறுதி செய்தார்கள்? அல்லது எப்படி அந்த ரேகை அம்மாவின் ரேகையென தேர்தல் ஆணையகம் ஏற்றது ? என்பதற்கான ஆதாரம் என்ன? என்பதை இதுவரை வெளியிடப்படவில்லை.
ஆகவே இந்த கைரேகை மர்மத்தைபோலவே மறைந்த முதல்வர் அம்மாவின் கை ரேகை ஒப்பம் சட்டரீதியானதா? என்பது சந்தேகத்திற்குறிய ஒன்றானதாகும் என மக்கள் கூறுகின்றார்கள்.
எனவே அம்மாவின் பெருவிரல் கைரேகையை பற்றிய சந்தேகத்தை சசிகலாவும் மத்திய அரசும் மக்களுக்கு தெரிவிக்கவேண்டியது மிக முக்கியமாகும். சட்டவல்லுனர்களும் மக்களுக்கு ஏற்பட்ட இந்த சந்தேகத்தை போக்க வேண்டும்
ஜெயலலிதா கை ரேகையில் சிக்கல்?? Reviewed by Unknown on 6:01:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.