Top Ad unit 728 × 90

6 வயதில் திருமணம் 13 வயதில் கர்ப்பம்: உலக குழந்தைகளின் அவலம்

உலகளவில் குழந்தைகள் திருமணம் நடக்கும் நாடுகளில் நைஜீரியா, சாட், மாலி, சோமாலியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் தான் முன்னணியில் உள்ளது என அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் ஒவ்வொரு நாளும் 15 வயதுக்குட்பட்ட குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதன் எண்ணிக்கை 12,000 ஆகும் என தெரியவந்துள்ளது.

மேலும், 2017 ஆம் ஆண்டில் 15 மில்லியன் பள்ளிக்குழந்தைகள் திருமண செய்துகொள்ளும் நிலையில் உள்ளனர் என இந்த நிறுவனம் முன்கூட்டியே அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை திருமணங்கள் நடைபெறுவதற்கு முதல் காரணமாக முன்வைக்கப்படுவது, மேலே கூறப்பட்டுள்ள நாடுகளில் நடைபெறும் "போர் மற்றும் வறுமை" ஆகும்.

பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளை பராமரிக்கப்பட முடியாத காரணத்தால் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக, இளம் வயது குழந்தைகளை கடத்தி செல்லும் குழந்தைகள் அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துகின்றனர்.

மேலும் குழந்தைகளின் பெற்றோர்களை தீவிரவாதிகள் கொன்றுவிடுவதால் அக்குழந்தைகள் தீவிரவாதிகளையே திருமணம் செய்துகொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் 6 வயது சிறுமி ஒருவர் தனது 40 வயது இருக்கும் நபரை கடன் பிரச்சனைகளுக்காக திருமணம் செய்துகொண்டார். மேலும் ஏமன் நாட்டை சேர்ந்த 8 வயது சிறுமி தனக்கு திருமணம் நடைபெற்ற அன்று ஏற்பட்ட உதிரப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளார்.

Syrian Sahar (13) என்ற 13 வயது சிறுமி தனக்கு திருமணம் நடைபெற்ற அதே ஆண்டிலேயே கர்ப்பம் தரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சிறுவயதிலேயே திருமணம் செய்துகொள்வதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

எனது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் நரகம் போன்று இருந்தது. ஆனால் காலம் செல்ல அந்த வாழ்க்கைக்கு என்னை தயார்படுத்திக்கொண்டேன்.

என்னைபோன்று யாரும் இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பதையே நான் விரும்புகிறேன். குறைந்தது 20 வயதில் தான் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த குழந்தைகள் திருமணத்தில் கொடுமையான விடயம் என்னவென்றால், கிராமப்புறங்களில் ஆடு மாடுகளுக்காக இளம் வயது குழந்தைகள் பேரம் பேசி விற்கப்படுவதுதான். இதுபோன்று விற்கப்படும் குழந்தைகள் அந்த செல்வந்தர்களின் ஆசை மனைவிகளாக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் திருமணத்தி ஒழிப்போம் என 144 நாடுகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டாலும், இன்றுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே நிலை தொடர்ந்துகொண்டு சென்றால், வருகின்ற 2030 ஆம் ஆண்டில் 700 மில்லியன் குழந்தைகள் திருமணம் செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த எண்ணிக்கையானது 2050 ஆம் ஆண்டில் 1.2 மில்லியன் ஆகும் என இந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
6 வயதில் திருமணம் 13 வயதில் கர்ப்பம்: உலக குழந்தைகளின் அவலம் Reviewed by Unknown on 6:05:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.