கள்ளக் காதலால் காதை கடித்துவைத்த சம்பவம்: தீயாக பரவும் வீடியோ
பெங்களூரில் கே.ஜி.ஹள்ளி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட எஸ்.பி.ஆர். லே–அவுட் பகுதியில் வைத்து பாத்திமா என்ற பெண்ணை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்மநபர், திடீரென்று அருகில் வந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், அவரை கடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாயிருந்தது.
கண்காணிப்பு கமெராவில் அந்த பெண்ணை மர்மநபர் ஒருவர் பின்தொடர்ந்து வரும் காட்சிகள் மட்டும் பதிவாகி இருந்தது. ஆனால் பெண்ணுக்கு மர்மநபர் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை தாக்கிய சம்பவம் சிறிது தூரம் தள்ளி நடந்திருந்ததால், அதுதொடர்பாக எந்த காட்சிகளும் கண்காணிப்பு கமெராவில் பதிவாகவில்லை.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மீனா தரப்பில் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட இரு நபர்கள் தான் குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இர்ஷாத் கான்(34) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இவருக்கும் பாத்திமாவின் அக்காவுக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.
இதனிடையே, இர்ஷாத்துக்கும், பாத்திமாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாத்திமாவுக்கு திருமண ஏற்பாது செய்யப்பட்டுள்ளது.
அதனை நிறுத்துவதற்காகவே இவர்கள் இருவரும் நாடகமாடி இப்படி ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் என தெரிவந்துள்ளது.
இவர்கள் இருவரும் அதிக முறை கைப்பேசியில் அதிக நேரம் உரையாடிதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. மேலும் இதுகுறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக் காதலால் காதை கடித்துவைத்த சம்பவம்: தீயாக பரவும் வீடியோ
Reviewed by Unknown
on
5:31:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:31:00 PM
Rating:
கருத்துகள் இல்லை: