Top Ad unit 728 × 90

கண்களை வைத்தே அவர் எப்படி பட்டவர் என அறிய முடியும்: எப்படி தெரியுமா?

ஒருவரின் கண்களை வைத்தே, அவரது மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முடியும். இதுபற்றிய சிறிய தொகுப்பு இங்கே.

சிலர் கண்களை ஊடுருவியே, உண்மை மன ஓட்டத்தைப் புரிந்துகொள்வார்கள். இதற்கு, ஆன்மீகம், ஜோதிடம் உள்ளிட்டவற்றில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அறிவியல் ரீதியாகக் கண்களின் மொழி பற்றி பல உண்மைகள் ஆய்வு செய்து, நிரூபிக்கப்பட்டுள்ளன

கண்கள் பேசும் மொழியின் விவரம் பின்வருமாறு:

    கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.

    கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.

    கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.

    கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது.

    கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது, ஆசைப்படுகிறது.

    கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.

    கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.

    கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.

    கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.

    கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.

    கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.

    கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.

    கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.

    கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்.

    கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது.

    கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.

    கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.

    கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.

    கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் காம வயப்படுகிறது.

    கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.

    கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.

    கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.

    கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.

    கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.

    கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.

    கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.

    கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.
கண்களை வைத்தே அவர் எப்படி பட்டவர் என அறிய முடியும்: எப்படி தெரியுமா? Reviewed by Unknown on 5:55:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.