சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்: இலியானா
“சினிமா எனது உயிர் போன்று இருக்கிறது. ஆனால் அதிலேயே மூழ்கி விடாதே என்று எனது இதயம் சொல்கிறது. இதயம் சொல்வதைத்தான் நான் கேட்கிறேன். சினிமாவே உலகம் என்று இருக்க மாட்டேன். சினிமா நிறைய பெண்கள் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமாவில் நடித்து பெரிய கதாநாயகியாக உயர வேண்டும் என்று வெறியோடு வந்த பல இளம் பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. அந்த பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி, வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிற்பதை நேரில் பார்த்து இருக்கிறேன். அவர்களை பார்த்து என்னை பக்குவப்படுத்தி உள்ளேன்.
சினிமாவில் எந்த திட்டமிடுதலும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறேன். பட வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன். இல்லாவிட்டால் கவலைப்பட மாட்டேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய பட உலகில் 7 ஆண்டுகள் நிலைத்து இருந்தேன். அதன் பிறகு இந்திக்கு வந்தேன். தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பது எளிதானது. ஒரு படத்தை மூன்று, நான்கு மாதங்களில் எடுத்து விடுவார்கள். இந்தியில் தொழில் நுட்ப பணிகளுக்கு நிறைய காலம் எடுத்துக்கொள்கிறார்கள்.
சினிமாவில் நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்ற எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு இல்லை. அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாத அளவுக்கு வாழ்க்கை பயணத்தை நகர்த்த வேண்டும். எனக்கு 30 வயது ஆகிறது. வயதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. வயது என்பது வெறும் நம்பர்தான். 23 வயதானவர் போல் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் சொல்லும்போது மகிழ்கிறேன்.
திருமணம் பற்றி திட்டமிடவில்லை. நேரம் வரும்போது அது நடக்கும். நானும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனது சொந்த வாழ்க்கை பற்றி பேச விரும்பவில்லை. ஆண்ட்ரூ மிகச்சிறந்த மனிதர். என்னையும் சிறந்த பெண்ணாக மாற்றி இருக்கிறார். அவரிடம் உண்மை இருக்கிறது.”
சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்: இலியானா
Reviewed by Unknown
on
4:57:00 AM
Rating:
Reviewed by Unknown
on
4:57:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: