காதணி வடிவில் காதலை வெளிப்படுத்திய நயன்தாரா..!
நயன்தாரா பற்றிய காதல் ‘கிசுகிசு’க்களுக்கு பஞ்சமே இல்லை. என்றாலும் அவர் எதைப்பற்றியும் கவலைப்படுவது இல்லை. படத்தில் நடிப்பதில்தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனாலும் அவருடைய காதல் பற்றியும் அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் கசிந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பு நயன்தாரா, பிரபுதேவாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியானபோது காதலர் பெயரை நயன்தாரா கையில் பச்சை குத்திக்கொண்டார் என்ற தகவல் பரவியது. அது பற்றிய படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சமீபத்தில் பழைய காதலர்கள் ஒரு ஓட்டலில் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை இருவரும் உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில், பிரபுதேவாவுக்காக கையில் பச்சை குத்திக் கொண்ட நயன்தாரா இப்போது காதில் ‘வி’ வடிவம் உள்ள தங்க கம்மலை அணிந்திருக்கிறார். நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இருவரும் தீவிரமாக காதலிக்கிறார்கள். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். விரைவில் திருமணம்... என்று புதுப்புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
என்றாலும், இது பற்றி ஆம்...என்றோ... இல்லை...என்றோ இருவரும் வாய் திறக்கவில்லை. இப்போது, விக்னேஷ் சிவனின் பெயரின் முதல் ஆங்கில எழுத்தான ‘வி’ வடிவ காதணியை நயன்தாரா அணிந்திருக்கும் செய்தி நிச்சயம் விக்னேஷ் சிவனை காது குளிர மகிழ வைக்கும் விஷயம் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

Reviewed by Unknown
on
4:52:00 AM
Rating:
Reviewed by Unknown
on
4:52:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: