Top Ad unit 728 × 90

ஓசி செக்ஸ் உறவுக்கு கூடத்தான் இவ்வளவு பேர் வருவாங்க! ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பீட்டா ஆர்வலர்..!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், Free Sex தலைப்பை முன்வைத்து இப்போராட்டத்தை கேவலமாக விமர்சித்திருக்கிறார் விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன்.

ஜல்லிக்கட்டு தங்கள் பாரம்பரிய விளையாட்டு எனவும் அதை எப்படி ஒழிக்க முடியும் என இளைஞர்கள் உட்பட பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் தற்போது தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் விலங்கு நல ஆர்வலர் ராதாராஜன் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து சற்று சர்ச்சைக்குரிய வகையில் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், தற்போது வந்து தனி தமிழ்நாடு வேணும் என்று கேட்டால் கண்டிப்பா வந்து 25,000 பேர் வருவார்கள். அதுவே ஒரு Free Sexன்னு ஒரு தலைப்பு வைத்தால் அதுக்கு ஒரு 50,000 பேர் கண்டிப்பாக வருவார்கள் என கூறியுள்ளார்.

ஒரு பிரச்சனை என்றால் தெருவில் வந்து போராடுவது தான் மக்களின் உணர்வாக பிரதிபலிக்கிறது.

இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் எல்லாத்தை விடவும் முக்கியம். உச்சநீதிமன்றத்தில் இருந்து ஒரு தீர்ப்பு வந்துள்ளது என்றால் அதற்கு தாம் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசோட செயல்பாடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

ஜனவரி 2016 ஆம் ஆண்டில் இந்த அறிவிப்பு வந்துவிட்டது தவறு என்பது தான் தன்னுடைய கருத்து. அதன் பிறகு இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இதனால் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.

இன்றைக்கு ஆந்திராவில் சேவல் சண்டையில் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது. 900 மாடுகளை வரிசையில் நிற்க வைத்து ஓடவிடுவது எப்படி காட்சிப்படுத்தவில்லை என்று சொல்கிறார்கள் எனபது தெரியவில்லை என்றும் ஜல்லிக்கட்டை வைத்து அவர்கள் பணம் சம்பாதிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டில் சூதாட்டம் நடப்பது உண்மை என்றும் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் அடித்து விளையாடுவது அவர்களின் விருப்பம் எனவும் இதில் காளை விருப்பப்பட்டு வரவில்லை எனவும் கூறியுள்ளார்.

மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால் அதற்கு பிறகு நாங்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். ஆனால் மத்திய அரசு அதை செய்யாது என உறுதிபட கூறியுள்ளார்.

ஓசி செக்ஸ் உறவுக்கு கூடத்தான் இவ்வளவு பேர் வருவாங்க! ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பீட்டா ஆர்வலர்..! Reviewed by Unknown on 5:32:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.