டோனி சிறந்த தலைவர்.!அதற்காக கோஹ்லி ஒன்றும் சளைத்தவர் அல்ல:அஸ்வினின் பல்டி அடிப்பு!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், டோனி சிறந்த தலைவர் தான் என்றும் அதற்காக கோஹ்லி ஒன்றும் சளைத்தவர் அல்ல என்றும் கூறியுள்ளார்.
இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக டோனி அறிவித்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு தலைவராக கோஹ்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் மற்றும் பன்முக ஆட்டக்காரருமான அஸ்வின் இது குறித்து கூறியுள்ளார்.
டோனி மிகப்பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர், மிகச் சிறந்த வீரரான அவரது தலைமையில் விளையாடியது பெருமையான தருணங்கள். தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியிருப்பது, அவரின் தனிப்பட்ட முடிவு. அது குறித்து எந்தக் கருத்தும் நான் கூற முடியாது. டோனியின் இந்த முடிவை நாம் மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் டோனி மிகச்சிறந்த தலைவன் என்பதில் சந்தேமில்லை. அதற்காக விராட் கோஹ்லியின் திறமையை நாம் குறைத்து மதிப்பிட முடியுமா டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்ததன் மூலம் தான் ஒரு சிறந்த தலைவன் என்பதை கோஹ்லி நிரூபித்துள்ளார்.
கோஹ்லி ஒன்றும் சளைத்தவர் இல்லை. இப்படித்தான், கங்குலி கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது இனி இந்திய அணி என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், டிராவிட், கும்ப்ளே அதைத் தொடர்ந்து டோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி வெற்றிகளை வசமாக்கியது. அதுபோலவே கோலியின் தலைமையிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்படும் என்று கூறியுள்ளார்.

Reviewed by Unknown
on
5:05:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIwn7gcuHyzAFNILefKjO5m_VqPZ5PZ2AF_O2TmKPBY9AqzzU5YyqLj_3D9uyeTZYWFXZb5zRDhypWIvXGlL2-cWzApRv3D_kFJb-ofH-4Q64Vqq10ioQ-szL39eWw00UPtp_3RTgl5vsm/s72-c/W3.jpg)
கருத்துகள் இல்லை: