Top Ad unit 728 × 90

பருமனான உடலை சிக்கென காட்டும் ஸ்டைல்கள்!

பருமனைக் குறைப்பது பார்ப்பவர்களுக்கு சிக்கெனத் தெரிய வேண்டுமென்றால், வெறுமனே டயட் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். சில உடைகள், பருமனாகவே இருந்தாலும் அவர்களைக் கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும்.
நம்முடைய அழகு உடல்வாகில் மட்டுமே வெளிப்படுவதில்லை. அதனால் உடுத்தும் உடையிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
என்ன மாதிரியான உடைகள் உடுத்தும் போது, பருமனான உடலை ஒல்லியாகக் காட்ட முடியும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உங்களுக்காக ஆடை வடிவமைப்பு நிபுணர்கள் தரும் சில ஸ்டைல் டிப்ஸ்கள் இதோ…

மிடி அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களைவிட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் பருமனானவர்களும் மிடியைத் தேர்ந்தெடுக்கலாம்.

அதேசமயம் தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக்கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் குட்டை மிடிகளைத் தேர்ந்தெடுங்கள். குட்டையான மிடி அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகத் தெரியும்.

மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. இறுக்கமான ஆடைகள், உங்கள் உடலில் அதிகமாக உள்ள சதைப்பகுதியை அப்படியே மற்றவர்களுக்கு காட்டிக்கொடுத்துவிடும்.

சரியான அளவில் ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் அணியலாம். அந்த ஜீன்ஸ்க்குத் தகுந்தபடி, சரியான ஹீல்ஸ் அணிவது அவசியம். உயரமான ஹீல்ஸ் அணியும்போது,  உங்கள் உடலை இன்னும் கொஞ்சம் ஒல்லியாகக் காட்ட முடியும்.

உள்ளாடைகளைத் தேர்வு செய்வதும் முக்கியம். பிரா வாங்கும்போது சரியான அளவும் உங்கள் உடல்வாகுக்குப் பொருத்தமாகவும் இருப்பது அவசியம். இல்லையென்றால், முதுகுப்பகுதியில் சதைகள் வெளியே பிதுங்கிக் கொண்டு இருக்கும். அது மற்றவர்களை ஈர்க்காது. முகம் சுளிக்கவே வைக்கும்.

நல்ல டார்க் ரெட், கருப்பு ஆகி நிறங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.

இடுப்புக்கு மேலே பேண்ட் அணியக்கூடாது. இடுப்புக்குக் கீழே, தொப்புள் பகுதியில் பேண்ட் அணிய வேண்டும்.

கோடு போட்ட டிசைன்களாக இருக்கும்போது, செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை உடுத்த வேண்டும். அவை ஒல்லியாகக் காட்டும். கிடைமட்டமான கோடுகள் உள்ள ஆடைகளாக இருந்தால், அது உங்கள் எடையை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே காட்டும்.
பருமனான உடலை சிக்கென காட்டும் ஸ்டைல்கள்! Reviewed by Unknown on 3:40:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.