ஆண்களே உங்களிடம் இந்த பழக்கம் உள்ளதா? அப்போ நீங்கள் ஜென்டில்மேன் தான்!
ஒரு ஜென்டில்மேன் ஆணாக இருப்பவர்கள் தங்களின் வெற்றி, அந்தரங்க வாழ்க்கை பற்றி வெளிப்படையாக யாரிடமும் பேச விரும்ப மாட்டார்கள்.
ஜென்டில்மேன் ஆண்கள் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் உட்கார நாற்காலி எடுத்து போடுவதில் இருந்து. உணவு பரிமாறும் பழக்கம் வரை அனைத்திலும் உதவுவார்கள்.
தன்னை யாராவது அதிகமாக காயப்படுத்தி பேசினாலும், கடுமையாக விமர்சித்தாலும் கூட அதை செவி கொடுத்து கேட்காமல் மாட்டார்கள். அப்படியே கேட்டாலும் அதில் இருக்கும் தேவையற்றதை காதில் ஏற்றிக் கொள்ளவே மாட்டார்கள்.
பொது இடங்களில் விரோதியாக இருந்தாலும், ஏமாற்றிய காதலியாக இருந்தாலும் கூட, எதிரியே சண்டையிட முனைந்தாலும் கூட அவர்கள் மீது கோபம் கொள்ளாமல், அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விடுவார்கள்.
தன்னிடம் மற்றவர்களாக ஏதேனும் கூறாமல், அவர்களை பற்றிய அந்தரங்க விஷயங்கள் பற்றி கேட்க மாட்டார்கள். வேறு யாரையும் அவர்களின் பழைய வாழ்க்கையை வைத்து நல்லவர்கள், கெட்டவர்கள் என விமர்சிக்க மாட்டார்கள்.
பொதுவாக மற்றவர்களிடம் ஏதேனும் ஒரு பேச்சை ஆரம்பிக்கும் போது நல்லதை பற்றி மட்டுமே பேச துவங்குவார்கள்.
தன்னை மற்றவர்கள் ஸ்பெஷலாக நினைக்குமாறு உணர வைப்பார்கள். மேலும் அவரது வாய்மொழி மற்றும் உடல் மொழி எப்போதுமே நல்ல விதமாக இருக்கும்.
ஆண்களே உங்களிடம் இந்த பழக்கம் உள்ளதா? அப்போ நீங்கள் ஜென்டில்மேன் தான்!
Reviewed by Unknown
on
6:04:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc8IuYG_ozXRD2sBEpg4oY0jWudk_pUXQiqEIihZ5J-oEZ1lEtWQkTpE8kfpTKM7Nq6qmrgx99dQ6yUT-MCnbVVwYElF7U_ZGIElywKBTbeGiIQyHPH-S68MV4mIG8rg5GyRn7hxern3sV/s72-c/How+Lanka+%252886%2529.jpg)
கருத்துகள் இல்லை: