Top Ad unit 728 × 90

மஞ்சளின் மகிமை-நீங்கள் அறியாத பல விடையங்கள்: உள்ளே

மஞ்சளின் மகிமை…!
♥எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும், மங்களகரமாக ஆரம்பிக்க வேண்டும் என நம் பெரியோர்கள் கூறுவார்கள். அதாவது நம் தமிழர்களுக்கு மஞ்சள் என்பது இன்றியமையாதது. உள்ளத் தூய்மைக்கும், உடல் தூய்மைக்கும் மற்றும் மங்களச் சிறப்புகளுக்கும் நன்கு பயன்பட்டு வரும் அரும்பொருள் மஞ்சள்.
♥புதிய ஆண்டு வியாபாரம் போன்றவை ஆரம்பிக்கும் பொழுதும் மஞ்சளைத் தான் பிரதானமாக அனைத்து பொருட்களிலும் இட்டு இறைவனை வணங்குகின்றோம். சமையலுக்கும் மஞ்சள்தூளை பயன்படுத்துகின்றோம். பெண்கள் மஞ்சளை அரைத்துப் பூசி நீராடுகின்றனர்.
♥மக்களின் மங்களச் சின்னமாகத் திகழும் மஞ்சள் உடலின் ஆரோக்கியத்தைச் சுட்டிக்காட்டவும், பலவித பிணிகளை குணமாக்கும் அற்புதமான மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. பெண்கள் மஞ்சளைப் பூசுவதனால் பித்தம், வாதம், வாந்தி தோச(ஷ)ங்கள் அனைத்தும் நீங்குகிறது என்று மருத்துவ சாத்திரம் கூறுகிறது.
♥அதுமட்டுமின்றி மஞ்சளினால் முகத்தில் மினுமினுப்பு உண்டாகும். மற்றும் முகத்தில் தோன்றும் பருக்கள், தேமல்கள் போன்ற சரும வியாதிகளைப் போக்குவது மட்டுமின்றி தூக்கத்திலும் இனிய சுகம் காணலாம்.
♥தற்போதைய விஞ்ஞான ஆராய்ச்சியில் அமெரிக்காவின் டெக்சாசு(ஸ்) என்னும் பல்கலைக்கழகத்தின் எம்.டி.ஆண்டர்சண் புற்று நோய் மையம் நடத்திய ஆய்வில் மஞ்சளுக்கு தோல் புற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் உண்டு என்று கண்டுபிடிக்கப்ப்பட்டுள்ளது.
♥தோல் புற்று நோய்க்கு காரணமான “மெலனோமா” என்ற கலங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தக் கூடிய ஆற்றல் மஞ்சளுக்குண்டு என்றும், புற்று நோய்க்கு காரணமான கலங்கள் (Cells) வளர்ச்சி பெறாமல் தானாகவே அழிந்துவிடக் கூடிய சூழ்நிலையை மஞ்சள் ஏற்படுத்துகிறது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்ட அரிய உண்மையாகும்.
♥பல நூறு ரூபாய்கள் கொடுத்து அழகுசாதனப் பொருட்களை வாங்கி அவதிப்படுவதற்குப் பதில், நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் மஞ்சளைப் பயன்படுத்தி அழகாகும் வழிகளைப் பார்ப்போமா..
♥1. காயாத மஞ்சள் கிழங்கை, அதன் இலையுடன் சேர்த்து அரைத்து பாசிப்பயறு மாவுடன் கலந்து தினமும் உடலில் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கம் வராது.
♥2. கழுத்து, கணுக்கால், முட்டி… போன்ற இடங்களில் கருப்பாக இருக்கிறதா? காயாத மஞ்சள் கிழங்கை அரைத்து, தயிருடன் கலந்து கருப்பாக இருக்கும் இடங்களில் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவர, கருமை காணாமல் போய்விடும்.
♥3. முகப்பரு பிரச்னையா? காயாத மஞ்சள் கிழங்குடன் வேப்பிலையை அரைத்துப் பூசி, 15 நிமிடங்கள் ஊற விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் பரு சீழ் பிடிக்காது. வலி குறைவதோடு, விரைவிலேயே மறைந்துவிடும். முக்கியமாக, பரு உதிர்ந்த பிறகு வடு உண்டாகாது.
♥4. முழு பாசிப்பயறு 100 கிராம், காசறை (கஸ்தூரி) மஞ்சள், கசகசா – தலா 10 கிராம், உலர்ந்த ரோயா(ஜா) மொட்டு, பூலாங்கிழங்கு – தலா 5 கிராம், எலுமிச்சை இலை, துளசி இலை, வேப்பிலை – மூன்றும் சேர்ந்து 2 கிராம் – இவற்றை மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
♥தினமும் இதில் சிறிதளவு எடுத்துத் தயிரில் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவுங்கள். மாசற்ற பொன்முகத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள்தான்!
♥5. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், தடிமன், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
♥6. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
♥7. மஞ்சளின் இருக்கும் குர்குமின் என்னும் உட்பொருள் மூளைக்கு அமிலத்தன்மை பரவாமல் தடுக்கிறது இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் அத்துடன் வயோதிபர்கள் மத்தியில் வரும் மூளை அழுகல் என்னும் நோயையும் தடுக்கிறது.
நல்ல பயன் பெறுவதற்கு குறைந்தது வாரத்தில் மூன்று நாட்களாவது உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
♥8. தமிழ் மருத்துவர்கள் மஞ்சளில் இருந்து பெறும் எண்ணெயை சிறந்த கிருமிக் கொல்லியாகப் பாவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துப்படி பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், புண் சுகமாகும்.
♥பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் ஏற்படும் வயிற்று வலி, மாதவிடாய்ச் சிக்கலுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது.
♥9. பெண்களின் பூப்பு காலத்தில் அவர்களின் உடலில் பலவேறு மாற்றங்கள் நிகழுகிறது பெண்களின் உடலமைப்பு வெளிப்புறமாக இருப்பதனால் அவர்களுக்கு பலவேறு நோய் தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளமையை அறிந்த பழந்தமிழர்கள் அவ்வாறு எந்த தீங்கும் வரகூடாது என எண்ணியே பண்பாட்டு முறையை ஆழப் புகுத்தினார்கள்.
♥எனவே இந்த நாளில் பெண்களுக்கு மஞ்சள் நீராட்டுவிழா எடுத்தார்கள் . இதனால் தோல் சம்பந்த மான பிணிகளும் மற்றும் பல்வேறு தொற்றுகளும் வராது தடுத்தனர் .
♥10. பெண்கள் முகத்துக்கு மஞ்சள் பூசிக் குளிப்பதால்தான் அவர்களது முகத்தில் மீசை, தாடி வளர்வதில்லை’ என்ற நம்பிக்கை கிராமப்புறங்களில் உண்டு. இதனால் ஆண்கள் முகத்தில் மஞ்சள் பூசப் பயப்படுவார்கள்.
♥ஆனால், மஞ்சளுக்கும் முடி உதிரலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் உண்மை. பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது என்பது உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் (Hormone) வகைகளில் ஒன்றினால் ஏற்படுவது.
♥குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் என்ற தாவர தங்கத்தை தற்போதைய நாகரீக பெண்கள் தவிர்த்துவிட்டு, அழகு சாதன நிலையங்களில் கிடைக்கும் விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தி தங்கள் அழகை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர்.
♥அவர்கள் பயன்படுத்தும் அந்த அழகு சாதனங்களில் கூட மஞ்சள் கலந்துள்ளது என்பதே உண்மை. மேலும் இயற்கையான மஞ்சளை பூசுவதால் உண்டாகும் முக அழகு எவ்வளவு ஆயிரங்களை செலவழித்தாலும், அவர்களுக்கு கிடைக்காது என்ற உண்மை எப்போது புரியும் என்று தெரியவில்லை.
♥படியுங்கள்♥
♥ஒரு குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் உடல்ரீதியில் மட்டுமல்லாமல் மனத்தாலும், செயலாலும், வாக்காலும் ஒன்றாகியவர்கள் ஆவர்.
♥கணவன் மனைவியைத் துன்புறுத்துவதும், மனைவி கணவனை துன்புறுத்துவதும் உண்மையில் தம்மை தாமே துன்புறுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும். ஒரு குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சில முக்கிய உறவுகளைப் பிரதிபலிக்கின்றனர்.
உதாரணமாக:
♥1) தோழன்_தோழி = கணவனும் மனைவியும் எப்போதும் எந்தவொரு ஒளிவும் மறைவும் இல்லாமல், தங்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழ வேண்டும்.
♥2) மறுமகன்_மறுமகள் = மனைவி என்பவள் தன் கணவனின் பெற்றோருக்கு இன்னொரு மகளாகவும், கணவன் என்பவன் தன் மனைவியின் பெற்றோருக்கு இன்னொரு மகனாகவும் இருந்து அவர்களை நல்ல முறையில் அன்புடனும் அரவணைப்புடனும் பாதுகாக்க வேண்டும்.
3) குரு_சிஷ்ய = குடும்பவாழ்க்கையை துவங்குவதற்கு முன்னரே, பிரம்மச்சரிய பருவத்தில் குடும்பவாழ்க்கையைப் பற்றிய போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
♥எனவே, கணவனும் மனைவியும் தம் துணையார் வழிதவறி போனால் அவருக்கு நல்லறிவைப் புகட்டி மீண்டும் நல்ல பாதைக்குத் திருப்பி கொண்டு வர வேண்டும்.
♥’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று வாழாமல், கணவன் தப்பு செய்தால் மனைவி அவனைக் கண்டிக்க வேண்டும்.
♥4) தலைவன்தலைவி = ஒரு குடும்பத்தைப் பொருளாதார அளவில் உயர்த்த கணவனும் மனைவியும் சேர்ந்தே பாடுபட வேண்டும். எப்படி ஒரு நாட்டை அரசனும் அரசியும் நல்ல முறையில் வழிநடத்துவார்களோ, அதுபோல ஒரு குடும்பத்தை கணவனும் மனைவியும் வழிநடத்த வேண்டும்.
♥ நம்முடைய பாரம்பரியத்தில், ஒரு குடும்பம் ஒரு நாட்டின் பிரதிபலிப்பாக திகழ்கின்றது. கணவனும் மனைவியும் அந்த குடும்பத்தின் அரசனாகவும், அரசியாகவும் அமைந்துள்ளனர்.
♥ அவர்களின் பிள்ளைகளே அக்குடும்பத்தின் ‘மக்கள்’ ஆவர். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
♥5) தாய்_சேய் = குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அரவணிப்புடனும் அன்புடனும் வாழவேண்டும். கணவனுக்கு முடியாத நிலையில் மனைவி அவனுக்கு பணிவிடை செய்தலும், மனைவிக்கு முடியாத நிலையில் கணவன் அவளுக்குப் பணிவிடை செய்தலும் வேண்டும்.
♥ இதனாலே திருமண சடங்கின் போது, புரோகிதர் சொல்லித்தர கணவனும் மனைவியும் சேர்ந்து மனதார உச்சரிக்கும் மந்திரத்தில் “சுபஹே த்வம் ஜீவ சரத சதம்” என காலம்வரை உடனிருந்து (தன் துணையை) கவனித்துக் கொள்வேன் என வாக்குறுதி எடுத்துக் கொள்கின்றனர்.
♥6) சகோதரன்_சகோதரி = சண்டைகளும் மனசஞ்சலங்களும் இல்லா குடும்பவாழ்க்கை கிடையாது. எவ்வளவு சண்டைகள் போட்டாலும், எப்போதும் தன் துணையை விட்டுக் கொடுக்க கூடாது.
♥ கணவன் மனைவி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் மனமிறங்கி வந்து சமாதானம் பேசவேண்டும். இருவரும் ஒத்த மனத்துடன் கலந்துரையாடி பிரச்சனையைக் கலைந்து இனிதான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
♥7) தாய்_தந்தை = குடும்பவாழ்க்கையின் மிக முக்கிய நிலை தாய் தந்தை உறவு ஆகும். கணவனும் மனைவியும் குழந்தையை ஈன்றெடுத்தப் பின்னர் (அல்லது தத்தெடுத்தப் பின்னர்) அவர்கள் தாய் தந்தை என்ற நிலையை அடைகின்றனர்.
♥அந்த குழந்தைக்கு தேவையானவற்றையும் முழுமையான அறிவையும் அளிக்கவேண்டிய கடமையில் அவர்கள் ஈடுபடுவர். தம் மக்களைச் சான்றோர் மத்தியில் மதிக்க தக்கவர்களாக ஆக்கவேண்டியது பெற்றோர்களின் மிக முக்கிய கடமையாகும்.
8) மாமனார்_மாமியார் = ஒரு தம்பதியரின் மக்களின் துணை அவர்களுக்கு மறுமக்கள் ஆகின்றனர். இதனாலே நம் பாரம்பரியத்தில், மகளின் கணவன் மறுமகன் என்றும் மகனின் மனைவி மறுமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
♥ஒருவர் தன் மகன் அல்லது மகளிடம் எவ்வளவு அன்பும் அரவணைப்பும் செலுத்துவாரோ அதேபோல தன் மறுமக்களிடமும் செலுத்த வேண்டும்.
♥♥இதுபோல குடும்பவாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய நெறிகள் உள்ளன. இவை ஒரு சிறப்பான குடும்பவாழ்க்கையைப் பேண ஒரு வழிகாட்டல்களாக அமைக்கப்பட்டவை ஆகும்.
♥♥புராண கதைகளிலும் நம் முன்னோர்கள், தெய்வங்களை மையமாகக் கொண்டு சில நன்னெறிகளை உரைத்திருப்பார்கள்.
♥♥ஒரு குடும்பத்தின் பதி-தர்மத்தை கணவனும், பதினி-தர்மத்தை மனைவியும் கடைப்பிடிக்க வேண்டும். பிறனில் நோக்காமல் தன் துணையை உயிராக நேசிப்பவரே கற்புடையர் எனப்படுவர்
மஞ்சளின் மகிமை-நீங்கள் அறியாத பல விடையங்கள்: உள்ளே Reviewed by Unknown on 10:32:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.