Top Ad unit 728 × 90

ஜேர்மனியில் அறிமுகமான பேஸ்புக்கின் Fake News Tool

சமூக வலைத்தளங்களின் வரிசையில் அசைக்க முடியாத அளவிற்கு முதலிடத்தில் திகழும் பேஸ்புக் ஆனது சமீப காலமாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றது.

இதில் பாதகமான விடயங்கள் தொடர்பில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இதன்படி பொய்யாக பரப்பப்படும் செய்திகள் அல்லது தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கை செய்யக்கூடிய அல்லது ரிப்போர்ட் செய்யும் டூல் ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.

இந்த டூல் ஆனது முதன் முறையாக அமெரிக்காவில் மட்டுமே அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

காரணம், அங்கு இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலின் போது பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.

எதிர்காலத்தில் இவ்வாறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் பேஸ்புக் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜேர்மனியிலும் குறித்த டூலினை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி அமெரிக்காவிற்கு வெளியே முதன் முறையாக Fake News Tool அறிமுகம் செய்யப்படும் நாடாக ஜேர்மனி இடம்பிடித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த இந்த டூல் விரைவில் ஏனைய நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜேர்மனியில் அறிமுகமான பேஸ்புக்கின் Fake News Tool Reviewed by Unknown on 6:16:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.