வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளுக்கான பதிவுகள் இடைநிறுத்தம்!
பல்கலைக்கழக வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளுக்கான பதிவை இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளுக்காக மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை வரையறுக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
இதன்படி, எதிர்வரும் காலங்களில் உள்வாரி கற்கை நெறிகளுக்காக சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு நிகரான எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளைத் தொடர அனுமதியளிக்கப்படும்.
பட்டக் கற்கை நெறிகளின் தரத்தை பேணுவதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சில பல்கலைக்கழகங்களில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 80,000 மாணவர்கள் வெளிவாரி பட்ட கற்கை நெறிகளுக்காக இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.
இதனால் பல்கலைக்கழகங்களில் உள்வாரி பட்டக் கற்கைநெறிகளின் தரத்தை பேணுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிவாரி மாணவர்களின் எண்ணிக்கையை வரையறுப்பதன் மூலம் பட்டக் கற்கை நெறிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளுக்கான பதிவுகள் இடைநிறுத்தம்!
Reviewed by Unknown
on
8:12:00 PM
Rating:
Reviewed by Unknown
on
8:12:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: