இலவசக் கல்வி திட்டத்தில் கைவைக்கும் எண்ணம் கிடையாது!– லக்ஸ்மன் கிரியெல்ல
இலவச கல்வியை குறைக்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
இலவச கல்வி முறைமையை இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியே ஆரம்பித்தது.இலவச கல்வியை அழிக்கும் திட்டங்கள் எதுவுமில்லை.
இலவசக் கல்வி முறையை அறிமுகம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியே இலவச கல்வியை பாதுகாக்கும்.
அதேவேளை புதிய உலகத்திற்கு ஏற்ற வகையில் எமது கல்வி முறைமையை மாற்றியமைக்க வேண்டும்.
குறிப்பாக சில பட்டக் கற்கை நெறிகளின் ஊடாக தொழில்களை பெற்றுக்கொள்ள முடியாது.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு தனியார் துறைகளில் தொழில் பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இலவசக் கல்வி திட்டத்தில் கைவைக்கும் எண்ணம் கிடையாது!– லக்ஸ்மன் கிரியெல்ல
Reviewed by Unknown
on
8:02:00 PM
Rating:
Reviewed by Unknown
on
8:02:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: