ரஷ்யா தேர்த விவகாரம்:வாக்குப்பதிவின் போது பெண் அடாவடிதனம்(வீடியோ)
ரஷ்யாவில் நடைபெற்ற பாராளுமன்ற கீழ்சபைக்கான தேர்தலில் பெண் ஒருவர் வாக்குப்பதிவின் போது முறைகேடு காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் பாரளுமன்ற கீழ்சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி புடின் ஆதரவு பெற்ற கட்சிகள் அமோக வெற்றி பெற்றதுடன், எதிர்த்துப்போட்டி இட்ட எஞ்சிய கட்சிகளுக்கு பரிதாபமான தோல்வியை அளித்துள்ளது.
ஆனால் குறித்த தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை எனவும், அதிகாரிகளே மிரட்டி வாக்களிக்க நிர்பந்திக்கின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் நான்காவது முறையும் புடின் பதவிக்கு வரும் பொருட்டு இந்த தேர்தலில் வெற்றி உதவும் என அரசியல் நோக்கர்கள் கணித்திருந்த நிலையில், ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புடினின் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில் வாக்குப்பதிவு கூடம் ஒன்றில் பெண் ஒருவர் தேர்தல் முறைகேடில் ஈடுபடும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
வாக்குப்பதிவு கூடமொன்றில் தேர்தல் அதிகாரியாக செயல்படும் பெண் ஒருவர் கத்தையாக வாக்குச்சீட்டுகளை உரிய பெட்டிக்குள் திணிப்பது அந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகள் வெளியானதும், இதுபோன்று நாட்டில் ஒட்டுமொத்தமாக 427 இடங்களில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின, மட்டுமின்றி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உள்ளனர்.
ஆனால் தேர்தல் ஆணையர் இந்த குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்தமாக மறுத்துள்ளதுடன், ஒரு சில பகுதிகளில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தேர்தல் அமைதியாகவும் முறையாகவும் நடைபெறும் பொருட்டு பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும், அதன்பொருட்டே எவ்வித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் நடந்து முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மொத்தமுள்ள 450 தொகுதிகளில் ஐக்கிய ரஷ்யா கட்சி 343 இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா தேர்த விவகாரம்:வாக்குப்பதிவின் போது பெண் அடாவடிதனம்(வீடியோ)
Reviewed by Unknown
on
7:38:00 PM
Rating:
கருத்துகள் இல்லை: