Top Ad unit 728 × 90

சார்க் மாநாடு: இன்று டில்லியில் ஆரம்பம்!


தீவிரவாத முறியடிப்புக்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாக தெற்காசிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களின் முக்கிய மாநாடு புதுடெல்லியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

சார்க் அமைப்பில் உள்ள இந்தியா, இலங்கை, பங்களாதேஸ், மாலைதீவு, நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

எனினும் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர் அப்டாப் சுல்தான், இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.

இந்தியா- பாகிஸ்தான் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்தே, பாகிஸ்தான் தனது புலனாய்வுப் பிரிவு தலைவரை புதுடெல்லிக்கு அனுப்புவதில்லை என்று முடிவு செய்துள்ளது.

தீவிரவாத முறியடிப்புத் தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது குறித்து சார்க் நாடுகளின் புலனாய்வுத் தலைவர்களுக்கிடையில் நடத்தப்படும் இரண்டாவது கூட்டம் இதுவாகும்.

இந்த மாநாடு, இன்றும் நாளையும் புதுடெல்லியில் நடைபெறுகிறது.

இந்தியாவின் உள்ளகப் புலனாய்வு அமைப்பான ஐபியின் பணிப்பாளர் தினேஸ்வர் சர்மா இந்த மாநாட்டுக்குத் தலைமை வகிப்பார்.

தெற்காசியப் பிராந்தியத்தின் உறுதிப்பாடு, பாதுகாப்பு, பிராந்தியத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் கூடிய கவனம் செலுத்தப்படும்.

தற்போதுள்ள தீவிரவாத முறியடிப்பு பொறிமுறைகள், அவற்றின் குறைபாடுகள், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளையும் இந்த மாநாட்டில் புலனாய்வுத் துறைகளின் தலைவர்கள் ஆராயவுள்ளனர்.
சார்க் மாநாடு: இன்று டில்லியில் ஆரம்பம்! Reviewed by Unknown on 7:48:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.