Top Ad unit 728 × 90

12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 40 வயது கணவர்!

சீனாவில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 40 வயது கணவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Xuzhou – இல் அமைந்துள்ள மருத்துவமனைக்கு 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 12 வயது சிறுமியை அழைத்து வந்துள்ளார். அச்சிறுமியின் வயிறு பெரியதாக இருந்துள்ளது, மேலும் அவரது வயிற்றில் காயங்களும் இருந்துள்ளது.

அச்சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் அச்சிறுமியின் கரு ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஆனால் குழந்தையாகிய இவள் கருவுற்றிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என கருதி மருத்துவமனைக்கு பொலிசாரை வரவழைத்துள்ளனர்.

இதையறிந்த அச்சிறுமியின் கணவர், நீங்கள் தேவை இல்லாத கேள்விகளை எழுப்புகிறீர்கள், அவளை சோதனை மட்டும் செய்தால் போதும், எனது தனிப்பட்ட விடயத்தில் தலையிட வேண்டாம் என மருத்துவ ஊழியர்களுடன் சண்டையிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அந்நபரிடம் விசாரணை நடத்தியதில், அச்சிறுமி சீன நாட்டை சேர்ந்தவர் கிடையாது என்றும் வியட்நாமில் இருந்து விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொண்டார் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், அந்நபரை கைது செய்துள்ள பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 40 வயது கணவர்! Reviewed by Unknown on 9:24:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.