குடும்ப சண்டையை விசாரித்த போலீசார் சுட்டுக் கொலை!
பாம்ஸ்பிரிங் : அமெரிக்காவில், குடும்பச் சண்டையை விசாரிக்கச் சென்றபோது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், திடீரென துப்பாக்கியால் சுட்டதில், இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்; மேலும் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், பாம்ஸ்பிரிங் பகுதியில், ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையை விசாரிக்க, போலீசார், அந்த வீட்டுக்கு, நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவரிடம் போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அந்த நபர், தன்னிடமிருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சரமாரியாக சுடத் துவங்கினான்; இதில் ஒரு பெண் உட்பட இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு போலீஸ்காரர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரிடமும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Reviewed by Unknown
on
6:11:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:11:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: