Top Ad unit 728 × 90

தந்தையை சுட்டுக் கொன்ற 14 வயது மாணவன்!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள அண்டர்சன் நகரில் 14 வயது மாணவன் ஒருவன் தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான். இதனை அடுத்து தனது தந்தையின் காரை எடுத்துக்கொண்டு அவன் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று அங்கே உள்ள பள்ளிக் கூடம் ஒன்றின் சுவர் மீது மோதியுள்ளான். பின்னர் திடீரென இறங்கி அதே துப்பாக்கியால் பள்ளிக் கூடத்தை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளான். இதனால் பள்ளிக் கூடத்தில் இருந்த ஆசிரியர் ஒருவரும் 2 பிள்ளைகளும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். இதேவேளை குறித்த பள்ளிக்கு அருகில் உள்ள கல்விக் கூடம் ஒன்றில் பயிலும், ஷாகில் என்னும் தமிழ் மாணவன் இச்சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.

முதலில் தாம் இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று நினைத்து. நிலத்தில் படுத்து உயிரைக் காப்பாற்ற நினைத்ததாகவும். பல ஐ.எஸ் தீவிரவாதிகள் வந்திருக்கலாம் என்று நினைத்து அச்சம் கொண்டதாகவும் அவர் விவரித்தார். தீ அணைக்கும் படையினர் மற்றும் பொலிசார் உடனே விரைந்து வந்து அச்சிறுவனை கைதுசெய்த பின்னரே இது தனுப்பட்ட தாக்குதல் என்பதனை தான் உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தீ அணைக்கும் படை வீரர் ஒருவரே தனது உயிரை பணையம் வைத்து துப்பாக்கியோடு நின்ற அச்சிறுவனை , மடக்கிப் பிடித்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. ஷாகிலின் தந்தை யாழ் உரும்பிராய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர் என்பதும். அவர் நீண்ட வருடங்களாக அமெரிக்காவில் தங்கி வேலைபார்த்து வருவதாகவும் அறியப்படுகிறது.

அமெரிக்கா மட்டுமல்ல , பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் கூட இவ்வாறான தாக்குதல்கள் நடக்கலாம். இப்படி திடீரென நடந்தால் மாணவர்கள் என்ன செய்யவேண்டும் என்று பெற்றோர் கற்றுக் கொடுப்பது நல்லது என்று தமிழ் ஆர்வலர்கள் தமது கருத்தை அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்கள்.
தந்தையை சுட்டுக் கொன்ற 14 வயது மாணவன்! Reviewed by Unknown on 6:18:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.