2017 ஆண்டில் பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10வீத அதிகரிப்பு:விபரம் உள்ளே
எதிர்வரும் 2017ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10வீத அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மோஹன்லால் கிரேரோ தெரிவித்துள்ளார்.
இந்த அடிப்படையில் வருடந்தோறும் இந்த 10 வீத அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கல்விப்பொதுத்தாரதர உயர்தரப்பரீட்சையில் 3இலட்சம் பேர் தோற்றினர். இதில் 150,000 பேர் சித்திப்பெற்றனர்.
எனினும் இலவசக்கல்வி முறையின்கீழ் இதில் 27500 பேர் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பெறவுள்ளனர்.
இது பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 18வீதம் மாத்திரமே என்று ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மீதமுள்ள 82 வீதமான இளைஞர்களின் நிலைக்குறித்து அரசாங்க தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் கல்வி என்ற தொனிப்பொருளில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இந்தக்கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் தொழில்சார்பு உயர்கல்வியை அறிமுகப்படுத்தும் முகமான சட்டமூலம் ஒன்றை முன்வைக்க அரசாங்கம் எதிர்ப்பார்க்கிறது என்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Reviewed by Unknown
on
8:16:00 PM
Rating:
Reviewed by Unknown
on
8:16:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: