Top Ad unit 728 × 90

ஆண்ளே உஷார்! திருமணம் ஆக முதல் பெண்களிடம் கேட்ககூடாத கேள்வி

ஆண்- பெண் ஆகிய இருவரும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தான் திருமண வாழ்வில் இணைகிறார்கள். திருமண எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது காலத்தின் கையில் தான் இருக்கிறது என்று சொல்வதை விட, திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரின் கைகளிலேயே இருக்கிறது.

திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர், சிறிது காலம் தனிமையில் நேரத்தை செலவிட்டு ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன்னரான இடைப்பட்ட காலத்தில் அவ்வாறு சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் பரவாயில்லை.

திருமணத்திற்கு பின்னர் அறிந்து கொண்டு மனம் கோணாமல் இருவரும் நடந்து கொள்ளலாம், ஆனால் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும்போது நீங்கள் கேட்டுக்கொள்ளும் கேள்விகள் சரியானதாக இருத்தல் வேண்டும்.

குறிப்பாக ஆண்களுத்தான் இது, உங்கள் மனைவிக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள். அதன்பின்னர் அவர்கள் யாரிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனித்துக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய கேள்வி இதுதான். நீ யாரையாவது இதற்கு முன்னர் காதலித்திருக்கிறாயா? இந்த கேள்வியை நீங்களாக முன்வந்து கேட்கக்கூடாது.

அப்படி கேட்கும்போது, ஆம் என்ற பதிலை உங்கள் மனைவி கூறிவிட்டால், அதனை தாங்கிகொள்ளும் மனோபக்குவம் உங்களிடம் இருக்க வேண்டும்.

அப்படி திருமணத்திற்கு முன்னர் உங்கள் மனைவி வேறு ஒருவரை காதலித்திருந்தால், அதனைப்பற்றி அறிந்திருந்தாலும், அதை மறந்துவிட்டு அவளுடன் சந்தோஷமாக வாழும் நிலைக்கு வரவேண்டும்.

ஆனால், இன்றைய காலத்தில் நூற்றில் 99 சதவீத ஆண்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, தங்கள் நிம்மதியை தொலைத்துவிடுவார்கள்.

உங்கள் மனைவி, தாமாக முன்வந்து தனது முந்தைய காதல் கதை பற்றி சொன்னால், அதனை பற்றி அதிகளவு சிந்தித்து மூளைக்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்.

இதனால் உங்கள் மணவாழ்க்கை பாதிக்கப்படும். கடந்த காலம் என்பது கடந்த காலமாகவே இருக்கட்டும். எதிர்காலத்தை பற்றி சிந்தித்து வாழ்க்கையில் வெற்றி நடைபோடுங்கள்.
ஆண்ளே உஷார்! திருமணம் ஆக முதல் பெண்களிடம் கேட்ககூடாத கேள்வி Reviewed by Unknown on 7:50:00 PM Rating: 5

1 கருத்து:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.