Top Ad unit 728 × 90

ஆசைக்கு இணங்க மறுத்த இளம் பெண்ணின் கை துண்டிப்பு: 2 இளைஞர்கள் வெறிச்செயல்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பலாத்கார முயற்சியில் இளம் பெண்ணின் கையை 2 இளஞர்கள் துண்டித்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே இஸ்தாவுரி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 16 வயது மகளுடன் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர்களது பின்னால் மோட்டார்சைக்கிளில் 2 இளைஞர்கள் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆள ஆரவாரமற்ற பகுதியில் வைத்து இவர்கள் வந்த இருச்சக்கரவாகனத்தை மறித்த அந்த இளைஞர்கள் இருவரும்,

திடீர் என்று அந்த இளம்பெண்ணை துணியால் முகத்தை மூடி அருகில் உள்ள புதர் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர். இதில் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவர்களிடம் இருந்து விடுபட கடுமையாக போராடியுள்ளார்.

இதனிடையே அதில் ஒருவன் அந்த இளம் பெண்ணை தாக்கி கீழே தள்ளி பாலியல் வன்முறைக்கு முயன்றுள்ளான்.

ஆனால் அதற்கு உடன்படாமல் அந்த இளம் பெண் தொடர்ந்து போராடியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் தங்களது இருச்சக்கர வாகனத்தில் இருந்த அரிவாளை எடுத்து வந்து அந்த பெண்ணின் வலது கையை வெட்டி துண்டித்து விட்டு இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனிடையே இளம் பெண்ணின் கூச்சல் கேட்டு அப்பகுதியில் கூடிய சிலர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து கை துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொலிஸார் குறித்த இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதலில் இளம்பெண் ரெயிலில் அடிபட்டு கை துண்டிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தாள். ஆனால் அதில் நம்பிக்கை வராதா பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் சென்று விசாரணையில் இறங்கிய பின்புதான் உள்ளூர் அரசியல்வாதிகளின் மிரட்டல் காரணமாக மாற்றிச் சொன்னது தெரிய வந்தது.

மிரட்டல் விடுத்த உள்ளூர் அரசியல் பிரமுகர் யார் என்றும் கையை வெட்டியவர்களையும் பொலிஸார் தேடி வருகிறார்கள்.
ஆசைக்கு இணங்க மறுத்த இளம் பெண்ணின் கை துண்டிப்பு: 2 இளைஞர்கள் வெறிச்செயல்! Reviewed by Unknown on 6:21:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.