Top Ad unit 728 × 90

தீயாக பரவி வரும் மர்ம காச்சல்:இதுவரை 4குழந்தைகள் பலி!

மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 குழந்தைகள் சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இறந்துள்ளனர்.இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.     

சென்னை பொழிச்சலூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் இத்ரி. இவருக்கு பாகிமா,முகமது என்று இரண்டு குழந்தைகள்.கடந்த சில நாட்களாக மகன், மகள் இருவருக்கும் அதிகப்படியான காய்ச்சல் இருந்துள்ளது.
பதறிய பெற்றோர் வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரை அணுகி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் 4 நாட்கள் ஆகியும் காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது.

இதனையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று முன்தினம் (வியாழன்) 2 குழந்தைகளையும் இத்ரி சேர்த்துள்ளார். அப்போதே  குழந்தைகளின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. நிலைமையை உணர்ந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி முதலில் 8 வயது பெண்குழந்தை பாகிமா உயிர் இழந்தார். அதனையடுத்து சிறிது நேரத்திலேயே 4 வயதான முகமதுவும் பரிதாபமாக இறந்துள்ளான்.அடுத்தடுத்து  ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்ததால் மருத்துவமனையில் அதிர்ச்சி நிலவியது.காய்ச்சலுக்கு பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோரின் அழுகையால் மருத்துவமனை வளாகம் முழுக்க பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

இதே போல மதுரவாயல் கார்மேகம் நகர், அரக்காணல் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகள் லட்சிதாவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார். மேலும், காசநோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி கீர்த்தனாவும் நேற்று இறந்தார். ஒரே நாளில் அரசு மருத்துவமனையில்  இதனால் குழந்தைகளின் சாவு எண்ணிக்கை 4 ஆனது. ஒரே நாளில் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.இது குறித்து சுகாதாரத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மரணம் தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியுள்ளதாவது,“தமிழகத்தில் தற்போது காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில்  3 குழந்தைகள் காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். 4 நாட்கள் காய்ச்சல் பாதித்த நிலையில், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்ற முகமது, பாகிமா ஆகியோர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிக்சை அளித்தும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.அதே போல்  மதுரவாயல் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியும் காய்ச்சலில் இறந்துள்ளார். இதையடுத்து பொழிச்சலூர், மதுரவாயல் பகுதியில் சுகாதார தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கொசுக்களை அழிக்கவும், குடிநீரில் குளோரின் அளவு எவ்வளவு இருக்கிறது என்றும் ஆய்வு செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக மர்மக்காய்ச்சல் பரவுவது குறைந்த நிலையில்,இப்போது மீண்டும் தாக்கம் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீயாக பரவி வரும் மர்ம காச்சல்:இதுவரை 4குழந்தைகள் பலி! Reviewed by Unknown on 1:56:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.