கழிவறைக்கு சென்ற பெண்ணை கற்பழித்தவர் கைது!
சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Freiburgerstrasse என்ற நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் 28 வயதான பெண் ஒருவர் தனது தோழிகளுடன் திருமண நிகழ்விற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, இளம்பெண்ணிற்கு தெரியாமல் மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பிறகு வழியில் இருந்த ஒரு பொது கழிப்பறைக்கு இளம்பெண் சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த மர்ம நபர் இளம்பெண்ணிற்கு தெரியாமல் கழிவறைக்கு சென்று கதவை உட்புறமாக பூட்டியுள்ளார்.
மேலும், உள்ளே அறையில் இருந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. எனினும், முயற்சியை கைவிடாத அந்த இளம்பெண் மர்ம நபரை எதிர்த்து போராடியுள்ளார்.
சில வினாடிகளுக்கு பிறகு நபரிடம் இருந்து தப்பிக்க பலமாக குரல் எழுப்பியுள்ளார். தோழியின் குரல் கேட்டு அவர்கள் வருவதற்குள் கழிவறையை விட்டு அந்த மர்ம நபர் தப்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு மர்ம நபரை தேடியுள்ளனர்.
சில மணி நேரங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியபோது அவருக்கு 28 வயது என்றும் அவர் எகிப்து நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் கழிவறைக்கு சென்ற இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற நபர் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கழிவறைக்கு சென்ற பெண்ணை கற்பழித்தவர் கைது!
Reviewed by Unknown
on
7:11:00 PM
Rating:
Reviewed by Unknown
on
7:11:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: