Top Ad unit 728 × 90

‘ஐயா’,‘ஐயோ’ வார்த்தை ஆங்கில வார்த்தைகளாகின்றன!

தமிழில் நாம் பரவலாகப் பயன்படுத்தும் வார்த்தை ‘ஐயோ’. இந்த வார்த்தையை ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி தனது பிந்திய பதிப்பில் உள்ளடக்கியுள்ளது.

இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் அதிர்ச்சி மற்றும் துன்பத்தை வெளிப்படுத்த(In southern India and Sri Lanka, expressing distress, regret, or grief; ‘Oh no!’, ‘Oh dear!’) ‘ஐயோ’ என்ற சொல் பயன்படுத்தப்படுவதாக இதற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நாம் பயன்படுத்தும் ‘ஐயா’ என்ற சொல்லும் ஒக்ஸ்போட் ஆங்கில அகராதியின் பிந்திய பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அண்ணாவை இவ்வாறு அழைப்பார்கள் என்றும், ‘ஐயா’ என்ற சொல் பொதுவாக வயதில் மூத்த ஆணை மரியாதையாக அழைப்பதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
‘ஐயா’,‘ஐயோ’ வார்த்தை ஆங்கில வார்த்தைகளாகின்றன! Reviewed by Unknown on 6:45:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.