Top Ad unit 728 × 90

10,000 ஆண்களுடன் உறவு! ஒரு பெண்ணின் உருக்கமான கண்ணீர் கதை!

இந்த உலகில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தாங்கள் செய்யும் தொழில் தங்களுக்கு பிடிக்கவில்லையெனில், ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்த தொழிலை செய்துவிட்டு மாற்றுவழியை தேடிக்கொள்கிறார்கள்.

பல்வேறு தொழில்துறைகளில் இருப்பவர்கள் இந்த யுக்தியை தான் கையாளுகின்றனர். ஆனால் பாலியல் தொழிலுக்குள் மட்டும் சென்றுவிட்டால், அதிலிருந்து மீண்டு வேறு தொழிலுக்கு திரும்புவதற்கு பெண்களின் மனம் இடம் கொடுப்பதில்லை. இதைப்பற்றி அவர்களால் யோசிக்கக்கூட முடியவில்லை.

இந்த சமுதாயத்தின் பார்வை எப்படி இருக்கும்? என்ற ஒருவித மனப்போக்கே காரணம். சில பெண்கள் அதிலிருந்து மீண்டு வந்து சாதனைகளை நோக்கி பயணித்தாலும், பல பெண்களோ,,, நாம் திரும்பி சென்றால் சமுதாயம் நம்மை ஏற்றுக்கொள்ளுமா? என்ற ஒரு கேள்வியை மட்டும் மனதில் வைத்துக்கொண்டே, வெளிச்சத்திற்கு வராமல், தங்கள் வாழ்க்கை பயணம் முடியும் கட்டத்தில் வெளியேறுகிறார்கள்.

அப்படி பாலியல் தொழிலில் இருந்து மீண்டு வந்த க்வினெத் மொண்டெனேகுரோ என்ற பெண், தனது வாழக்கை பயணம் குறித்து "10,000 மென் அன்ட் கவுண்டிங்" என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

அவர் எழுதியுள்ளதாவது, பெரும்பாலான ஆண்கள், பெண்களை பாலியல் உறவு கொள்வதற்காக மட்டுமே என்ற கோணத்தில் பார்க்கின்றனர்.

அவர்களின் ஆசை ஒருபக்கம் இருந்தாலும். அந்த ஆசையை தீர்த்துக்கொள்ள எப்படி அணுகுவது என்பது முக்கியமானது.

இந்த தொழிலில், ஒரு மணி நேரத்திற்கு $500 - $1000 டொலர்கள் வரை பெற்றுள்ளேன், சுமார் 10,000 ஆண்கள் என்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டனர். மக்களுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவே, ஆண்களை மட்டுமே சந்திக்கும், அவர்களுக்காகவே பல நாட்களின் இரவு தூக்கத்தை தொலைத்த நான் ஒரு கட்டத்தில் போதை மருந்துக்கு அடிமையானேன்.

இதனால் என்னை நானே வெறுக்க ஆரம்பித்தேன். மன அளவில் பாதிக்கப்பட்ட எனக்கு நாளடைவில் சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டது.

வாழ்வில் உறவுகள், கனவுகளை தொலைத்து பொய்யான உலகில், நடைபிணமாக வாழ்ந்து வந்த நான் அதிலிருந்து வெளியேறி தற்போது உண்மை வாழ்க்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
10,000 ஆண்களுடன் உறவு! ஒரு பெண்ணின் உருக்கமான கண்ணீர் கதை! Reviewed by Unknown on 4:24:00 AM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.