இளைஞரின் பாலியல் தொல்லை: இரண்டு குழந்தையின் தாய் எடுத்த விபரீத முடிவு!
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை.
இவரின் மனைவி தீபா (28) இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அதே பகுதியில் ராஜீவ்காந்தி (27) என்னும் இளைஞர் வசித்து வந்தார், இவர் வேலை ஏதும் செய்யாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருநாட்களுக்கு முன்னர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தீபாவை ராஜீவ்காந்தி வழிமறித்து அவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அவரிடம் இருந்து விடுபட்டு வீட்டுக்கு ஓடிய தீபா நடந்த விடயங்களை அவர் கணவரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார்.
கணவனும் மனைவியும் உடனே இது பற்றி பொலிஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால் ராஜீவ்காந்தியை விசாரித்த பொலிசார் அவரை கைது செய்யவில்லை.
ஏற்கனவே இந்த விடயத்தில் மன உளைச்சலில் இருந்த தீபா ராஜீவ்காந்தி கைது செய்யபடாததால் இன்னும் மனம் வெதும்பி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் அறிந்து அங்கு வந்த பொலிசாரிடம் தீபாவின் உறவினர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர், எனினும் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்த ராஜீவ்காந்தியை கைது செய்த பொலிசார் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இளைஞரின் பாலியல் தொல்லை: இரண்டு குழந்தையின் தாய் எடுத்த விபரீத முடிவு!
Reviewed by Unknown
on
4:39:00 AM
Rating:
Reviewed by Unknown
on
4:39:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: