Top Ad unit 728 × 90

கார் ஓட்டிக்கொண்டு நிர்வாணமாக செல்பி எடுத்து இளம்பெண்: ஆபத்தில் சிக்கின!

அமெரிக்காவில் மதுபோதையில் கார் ஓட்டிக்கொண்டு நிர்வாணமாக செல்பி எடுத்த இளம்பெண் ஒருவர் பொலிஸ் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிர்யான் நகரை சேர்ந்த மிராண்டா ராடர்(19) என்ற இளம்பெண் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று மது அருந்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென தனது உடைகளை நீக்கிவிட்டு நிர்வாணமாக செல்போனில் செல்பி எடுத்துள்ளார்.

பின்னர், அப்புகைப்படங்களை Snapchat என்ற சமூக வலைத்தளம் மூலம் அவரது காதலனுக்கு அனுப்பியுள்ளார்.

காரை ஓட்டிக்கொண்டு இச்செயல்களில் ஈடுப்பட்டு வந்தபோது திடீரென அவரது கார் ஒரு பொலிசாரின் ரோந்து வாகனத்தின் பின்புறம் மீது மோதி நின்றுள்ளது.

அதிர்ச்சி அடைந்த பொலிசார் உடனடியாக இறங்கி சென்று பார்த்துள்ளனர். அப்போது, இளம்பெண் தனது உடைகளை அவசர அவசரமாக அணிந்துள்ளார்.

மேலும், அவருக்கு அருகில் ஒரு ஒயின் பாட்டிலும் திறந்த நிலையில் இருந்துள்ளது.

இளம்பெண்ணை உடனடியாக கைது செய்து பொலிசார் விசாரணை செய்தபோது, கார் ஓட்டிக்கொண்டு நிர்வாணமாக புகைப்படம் எடுத்து காதலனுக்கு அனுப்பியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், இளம்பெண்ணை எச்சரித்த பொலிசார் 2,000 டொலர் பிணையில் அவரை தற்காலிகமாக விடுதலை செய்துள்ளனர்.
கார் ஓட்டிக்கொண்டு நிர்வாணமாக செல்பி எடுத்து இளம்பெண்: ஆபத்தில் சிக்கின! Reviewed by Unknown on 6:31:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.