முதல்வர் நலன் கருதி யாகம் நடத்திய அமைச்சர் மயங்கி விழுந்தார்!
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு இடங்களிலும் அதிமுக தொண்டர்கள் அபிஷேகங்களும், பூஜைகளும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்வி அமைச்சர் அன்பழகன் முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி தருமபுரி பிரகதாம்பாள் அருளீஸ்வரர் கோவிலில் யாகம் நடத்தினார்.
அப்போது அக்னி குண்டத்தில் இருந்து அதிகமாக புகை எழுந்ததால் அமைச்சர் அன்பழகனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் யாகம் நடந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மயக்கம் தெளிந்த பிறகு மீண்டும் யாக பூஜைகளில் அவர் தொடர்ந்து கலந்து கொண்டார்.
முதல்வர் நலன் கருதி யாகம் நடத்திய அமைச்சர் மயங்கி விழுந்தார்!
Reviewed by Unknown
on
6:43:00 PM
Rating:
Reviewed by Unknown
on
6:43:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: