Top Ad unit 728 × 90

அகதிகள் தாய்நாட்டிற்கு திரும்பினால் ரூ.15 லட்சம் வழங்கப்படும்:பிரான்ஸ் அரசு அதிரடி அறிவிப்பு!

பிரான்ஸ் நாட்டில் புகலிடம் கோரி வந்துள்ள புலம்பெயர்ந்தவர்கள் தானே முன்வந்து தாய்நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பிரான்ஸில் புகலிடம் கோரி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு அரசு வழங்கும் நிதியுதவியும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

உதாரணத்திற்கு, புலம்பெயர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி கடந்த அக்டோபர் மாதம் 650 யூரோவாகவும், தற்போது அது 1,850 யூரோவாக அதிகரித்துள்ளது.

எனவே, இதனை தவிர்க்க தாய்நாட்டிற்கு திரும்ப விரும்பும் புலம்பெயர்ந்தவர்களுக்கு அரசு 2,500 யூரோ வரை பயணச்செலவுகளுக்கு வழங்கும் என அறிவிப்பு வெளியாகியாகியுள்ளது.

பிரான்ஸ் குடியமர்வு துறை உயர் அதிகாரியான Didier Leschi என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு நிதியுதவி பெற்று 3,051 புலம்பெயர்ந்தவர்கள் தாய்நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

எனினும், இவர்களில் சில தகுதியான புலம்பெயர்ந்தவர்களுக்கு தங்களது சொந்த நாட்டில் தொழில் தொடங்க சுமார் 10,000 யூரோ(15,70,049 இலங்கை ரூபாய்) வரை வழங்க அரசு தயாராக உள்ளது.

எனினும், புலம்பெயர்ந்தவர்களுக்கான இச்சலுகை எதிர்வரும் டிசம்பர் 31-ம் திகதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
அகதிகள் தாய்நாட்டிற்கு திரும்பினால் ரூ.15 லட்சம் வழங்கப்படும்:பிரான்ஸ் அரசு அதிரடி அறிவிப்பு! Reviewed by Unknown on 5:33:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.