Top Ad unit 728 × 90

உங்களுக்கு தெரியுமா? உங்கள் திருமண விழாவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் பணம் எடுக்கலாம்!

திருமணவிழாவுக்காக ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் பணத்தை எடுப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

பணம் எடுக்கும் வங்கிக் கணக்கில் நவம்பர் 8ம் திகதிக்கு முன்னதாக எடுக்கப்பட வேண்டிய தொகை இருப்பு இருந்திருக்க வேண்டும். இந்த வகையில் அதிகபட்சமாக வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் எடுக்கலாம்.

டிசம்பர் 30 மற்றும் அதற்கு முந்தைய திகதிகளில் திருமணம் நடத்தத் திட்டமிட்டிருந்தால் மட்டுமே இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மணமகன், மணமகள் அல்லது அவர்களது பெற்றோர்கள் ஆகியோரில் ஒருவர் ஒருமுறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவர்.

இதற்காக ரிசர்வ் வங்கி தரப்பில் பிரத்யேக விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விண்ணப்பப் படிவத்தில், பணம் எடுப்பவரின் பெயர், எடுக்க வேண்டிய தொகை, பான் கார்டு எண், மணமகன், மணமகள் பெயர், முகவரி, திருமண தேதி ஆகிய தகவல்களை நிரப்ப வேண்டும்.

மேலும், திருமணம் தொடர்பாக மேலே அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மை என்ற சொந்த உறுதிமொழியையும் விண்ணப்பதாரர் அளிக்க வேண்டும்.

யாருடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டுமோ அவரது பான் கார்டு, மணமகன், மணமகள் ஆகியோரின் அடையாளச் சான்று ஆகியவைகளின் நகல்களை இணைக்க வேண்டும்.

திருமண அழைப்பிதழ், முன்பண ரசீது (திருமண மண்டபம், சமையல் கலைஞர்களுக்கான தொகை) உள்ளிட்டவைகளின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

வங்கிக் கணக்கு இல்லாதவரே இந்த வசதியைப் பயன்படுத்தி ரொக்கமாக பணம் எடுக்க முடியும்.
உங்களுக்கு தெரியுமா? உங்கள் திருமண விழாவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் பணம் எடுக்கலாம்! Reviewed by Unknown on 5:20:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.