Top Ad unit 728 × 90

நீங்கள் மரணிக்கும் முன் தோன்றும் அறிகுறிகள் எவை தெரியுமா?

பொதுவாக மனிதனுக்கு ஒரு பிறவி தான், மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்வார்கள்.

ஆனால் அது இன்றளவும் பொய்யா அல்லது உண்மையா என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.

ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுடைய இறப்பு எப்போது எப்படி நிகழும் என்பதை கடவுளால் குறிக்கப்பட்டு விடுகிறது.

ஆனால் கடவுளைத் தவிர அந்த மரணம் எப்போது எப்படி நடக்கும் என்பதை மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களால் யூகிக்க முடியாத ஒன்றாகும்.

ஒருவருக்கு மரணம் ஏற்படுவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை சிவப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

சிவபுராணத்தில் கூறப்படும் மனிதர்களின் மரணத்திற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள்


  •  மனிதர்களின் வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது எனில், ஆறு மாதங்களில் இறப்பு நேரப் போகிறது என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

  •  ஒருவரது உடலில் திடீரென உடல் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாற்றம் ஏற்பட்டு, உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்பட்டால், அவர்கள் ஆறு மாதத்தில் உயிரிழக்க நேரிடலாம்.

  •  ஒருவருக்கு தொண்டை மற்றும் நாக்கு தொடர்ந்து விடாமல் வறட்சி நிலையை அடைந்துக் கொண்டிருந்தால், அவர்கள் மிக விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.

  •  ஒருவரின் இடது கையானது, அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்திலே இறந்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

  •  இரவில் நிலா மற்றும் பகலில் சூரியனை பார்க்கும் போது, கருப்பு அல்லது சிவப்பு நிறமுள்ள வட்டம் தென்பட்டால், அவர் 15 நாட்களுக்குள் இறந்து விடுவார் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை இரவில் பார்க்க முடியவில்லை அல்லது மிகவும் மந்தமாக தெரிகிறது என்றால், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று அர்த்தமாகும்.

  •  ஒருவர் திடீரென நீல நிறமுள்ள ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

  •  ஒருவரின் தலையில், கருடன், காகம், கழுகு மற்றும் புறா போன்ற பறவைகள் வந்து அமர்ந்தால், மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  •  ஒருவர் தன்னுடைய நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  •  ஒருவரால் எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது அல்லது நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகும்.

  •     ஒருவரால் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றில், அவருடைய பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
நீங்கள் மரணிக்கும் முன் தோன்றும் அறிகுறிகள் எவை தெரியுமா? Reviewed by Unknown on 5:07:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.