Top Ad unit 728 × 90

மகனின் கள்ளக் காதலியை போட்டுத்தள்ளிய பெற்றோர்! 3மாததின் பின் சிக்கினர்

மகன் வேறு சமூகத்துப் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் அப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த பெற்றோர் 3 மாதத்திற்கு பின் சிக்கியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்லத்துரை. இவரது மனைவி சவுந்தர்யா(21).

இந்நிலையில், சவுந்தர்யா திடீரென்று மாயமாகியுள்ளார். இதனால், அவரது தாயார் தங்கம்மாள் கடந்த 23ம் திகதி பரமத்திவேலூர் பொலிசில் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், மாயமான சவுந்தர்யாவுக்கும், பரமத்தி பகவதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சூர்யா(24) என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து, பொலிசார் சூர்யா வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர் மனோகரன்- சுமதியை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யாவுடன் தொடர்பில் இருந்த சவுந்தர்யா தன்னை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு சூர்யாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் சவுந்தர்யா தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், ஆத்திரத்தில் செய்வதறியாது இருந்த சூர்யாவின் பெற்றோர் சவுந்தர்யாவை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த ஆக.14ல் தங்களது மகனுக்கு பதிவு திருமணம் செய்து வைப்பதாக, சவுந்தர்யாவிடம் ஆசை வார்த்தை கூறி பிள்ளைகளத்தூரில் உள்ள தங்களது செங்கல் சூளைக்கு அழைத்துச் சென்று, சவுந்தர்யாவை கட்டையால் சரமாரியாக அடித்துக் கொன்று உடலை அங்கேயே புதைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, சூர்யாவின் பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மகனின் கள்ளக் காதலியை போட்டுத்தள்ளிய பெற்றோர்! 3மாததின் பின் சிக்கினர் Reviewed by Unknown on 5:49:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.