தாய் ஒடுவர் மது போதையில் விமானத்தில் அடிதடி: பிள்ளைகளுடன் இறக்கி விட்பட்ட சம்பவம்!
பிரித்தானிய தாயார் ஒருவர் அதிக மது கேட்டு கலாட்டாவில் ஈடுபட்டதால் அவரது குழந்தைகள் இருவருடன் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய தாயார் ஒருவர் தமது இரண்டு குழந்தைகளுடன் ஸ்பெயின் நாட்டின் Tenerife தீவுப் பகுதியில் இருந்து லண்டன் Gatwick பகுதிக்கு செல்ல பதிவு செய்திருந்தார்.
குறித்த தாயார் விமான நிலையத்தில் வைத்தே மது அருந்தியிருந்த நிலையில், விமானத்தின் உள்ளே மது வேண்டும் எனக் கேட்டு அருந்தியுள்ளார்.
இந்த நிலையில் மேலும் அதிகமாக மது கேட்டு அவர் களேபரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவருடன் வந்திருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இதனிடையே வேறொரு பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பும் நடந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பெண்மணியின் தொல்லை அதிகரித்த வண்ணம் இருப்பதைக் கண்ட விமான ஊழியர்கள், நிர்வாகத்தின் அனுமதியுடன் அந்த குழுவினரை விமானத்தில் இருந்து வெளியே இறக்கி விட்டுள்ளனர். இந்த களேபரத்தால் குறித்த விமானம் அங்கிருந்து புறப்பட 2 மணி நேரம் தாமதமானதாக கூறப்படுகிறது.
இதனிடையே மது போதையில் தள்ளாடிய பெண்மணியை விமானத்தினுள் அனுமத்தது ஏன் என்ற கேள்வியை சக பயணிகள் எழுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகிகளில் ஒருவர், தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயண நேரத்தை குதூகலமாக கழிக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும் அதற்கு இடையூறாக இருக்க அனுமதிக்க ,முடியாது என்றார்.

Reviewed by Unknown
on
6:02:00 PM
Rating:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiJAivh8AylFAhpztPGQvJ_nxiakVh7Fb_AXbNAkXEJNq1BDrKod6lCpQ9NSr4V2NQooqpYnSqmvH4Sdtjtd9rVCwXwOVCZCc84CB64oc5JeYyaRjO127aTEuC9hzVdgq83g2CJdLBxzfc/s72-c/ice_screenshot_20161128-072932.png)
கருத்துகள் இல்லை: