ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் ஒப்பந்தம்!
அண்மையில்
ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை அமெரிக்காவில்
குடியமர்த்தும் ஒப்பந்தம் உறுதியாகியிருப்பதை ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா கடல் வழியாக வர முயற்சிப்பவர்களை எச்சரித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் படகுகளின் வருகையை நிறுத்துவதில் Operation Sovereign Borders இன் வெற்றியானது எங்கள் கடல் எல்லைகள் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு இப்போது உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வர எத்தனிக்கும் எந்தவொரு படகும் இடைநிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுவதை அண்மையில் பலப்படுத்தப்பட்ட கடல்சார் வளங்கள் மற்றும் கண்காணிப்பு திறன்கள் உறுதிசெய்யும்.
OSB ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 29 ஆட்கடத்தும் படகுகளில் வந்த 740 க்கும் மேற்பட்டோர் இடைநிறுத்தப்பட்டு தாம் புறப்பட்டுவந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
இப்போதுள்ள ஐக்கிய அமெரிக்க அகதி அனுமதிகள் திட்டத்திற்குச் சிபாரிசு செய்யவென United Nations High Commissioner for Refugees (UNHCR) ஆல் உறுதிப்படுத்தப்பட்ட நவுரு மற்றும் பப்புவா நியூகினியில் உள்ள அகதிகளின் மறுவாழ்வைப்பற்றி ஆலோசிக்க ஐக்கிய அமெரிக்கா இணங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆரம்பத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய அகதிகளில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அவர்களின் மறுவாழ்வுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பப்புவா நியூகினி மற்றும் கம்போடியாவுடன் முன்கூட்டியே ஒழுங்குபடுத்தப்பட்ட நிரந்தர குடியேற்றத்துடன் இது இணைந்ததாகும்.
இது, ஒருதடவை மாத்திரமே இடம்பெறக்கூடியதும், எதிர்காலத்தில் மீண்டுமொருமுறை நடக்கமுடியாத ஓர் ஏற்பாடாகும் என்பதுடன், எதிர்காலத்தில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வர எத்தனிக்கும் எவருக்கும் கிடையாது.
ஆஸ்திரேலியாவினது எல்லைப்பாதுகாப்பு கொள்கை மாறவில்லை. நாம் தொடர்ந்தும் படகுகள் புறப்பட்டுவந்த நாட்டுக்கு அவற்றைத் திருப்பி அனுப்புவோம், அத்துடன் எதிர்காலத்திலும் இடம்பெறின் நாம் தொடர்ந்தும் பிராந்திய செயற்பாடுகளை கையாளுவோம்.
படகுமூலம் சட்டவிரோதமாக பயணிக்க எத்தனிக்கும் எவருக்கும், ஆஸ்திரேலியாவில் குடியேறுவது ஒருபோதும் அவரின் விருப்பத்தேர்வாகாது.
இப்பொழுது அரசாங்கம் இந்த ஏற்பாட்டை நிறைவேற்ற உறுதியாய் உள்ளது. ஏனெனில், இனிமேல் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வர எத்தனிக்கும் ஆட்கடத்தும் படகுகள் தோல்வியடைவதை உறுதிப்படுத்துவதற்காக நாம் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளோம்.
Australian Defence Force இன் ஆதரவுடன் ஆஸ்திரேலியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரியதும் அதிசிறந்த கடல் கண்காணிப்பு மற்றும் பதிலடி கொடுப்பதில் வல்லமைமிக்க கடற்படையுடன் Australian Border Force செயற்படுகிறது.
இவ்வாறு அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல நாடுகளில் அகதிகளை தொடர்ந்து மையப்படுத்தும் இந்த எச்சரிக்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

Reviewed by Unknown
on
6:15:00 AM
Rating:
Reviewed by Unknown
on
6:15:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: