26, 815 இலங்கை அகதிகளுக்கு மலேசியாவில் அகதி அந்தஸ்து!
2010 ஆம் ஆண்டு முதல் சுமார் ஒன்பது லட்சம் பேருக்கு மலேசியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
மலேசிய ஊடகங்களின் செய்திபடி, 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 888,294 மக்கள் மலேசியாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பதிருந்தனர். இவர்கள் மலேசியாவில் தங்குவதற்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
17 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மலேசியாவில் வசிப்பதாக மலேசிய பிரதமர் துறையின் அமைச்சர் சாஹிதன் காஷிம் தெரிவித்துள்ளார். அதில் 824,419 அகதிகள் மியான்மரைச் சேர்ந்தவர்கள், அதற்கு அடுத்தப்படியாக 26,815 இலங்கை அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் சோமாலியாவிலிருந்து 8,532 அகதிகள், பாகிஸ்தானிலிருந்து 7,541 அகதிகள், ஈராக்கிலிருந்து 6,394 அகதிகள், இன்னும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 14,793 அகதிகளுக்கு மலேசியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுற்றதாக சொல்லப்பட்டாலும் அங்கு ரோஹிங்கா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டு இருப்பதால் பெருமளவிலான முஸ்லீம்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதே போல் 2009 யுடன் இலங்கையில் போர் முடிவுற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதுடன் ராணுவத்தின் இருப்பும் பெருகியுள்ளமை ஈழத்தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. சோமாலியா, ஈராக், பாகிஸ்தானில் தொடரும் ஆயுத வன்முறை காரணமாக மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுகின்றனர்.
அகதிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விவகாரத்தில் கடந்த ஜூலை மாதம் மலேசிய அரசிற்கும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்திற்கும் முரண்பாடு நிலவியது இங்கு குறிப்பிடத்தக்கது.

Reviewed by Unknown
on
6:03:00 AM
Rating:
Reviewed by Unknown
on
6:03:00 AM
Rating:

கருத்துகள் இல்லை: