யாழில் பொலிஸார் வேட்டை:ஆவா குழுவில் ஒருவர் கைது அதிரடி கைது
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் இன்று அதிகாலை குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் பல பகுதிகளிலும் ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழுவின் சமூகவிரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆவா குழுவுடன் தொடர்புப்பட்டுள்ளார்கள் என சந்தேகிக்கப்படும் பலர் அண்மைய நாட்களாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டத்தரிப்பு – செட்டிகுறிச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிதுஷன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸார் அவரை கைது செய்தமைக்கான ஆவணத்தை கையளித்துள்ளதாக உறவினர்கள் மேலும், தெரிவித்துள்ளனர்.
யாழில் பொலிஸார் வேட்டை:ஆவா குழுவில் ஒருவர் கைது அதிரடி கைது
Reviewed by Unknown
on
5:17:00 PM
Rating:
Reviewed by Unknown
on
5:17:00 PM
Rating:

கருத்துகள் இல்லை: