Top Ad unit 728 × 90

கருணாவின் கைது குறித்து மேலும் பல அதிச்சி தகவல்கள்!

விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத்தளபதிகளில் ஒருவராக இருந்து, பின்பு புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து கொண்டவர் கருணா.

அரசாங்கத்தோடு இணைந்த பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.

அரசாங்க வாகனங்களை முறைக்கேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில், நேற்றைய தினம் கருணா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அவரின் கைது நன்கு திட்டமிடப்பட்டது என்று அரசியல் தரப்பினர் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

ஏனெனில் நாட்டில், நிலவிவரும் அரசியல் சூழ்நிலைகள் இப்பொழுது மைத்திரி ரணில் அரசாங்கத்திற்கு பாதக நிலையினை ஏற்படுத்தும் என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்து.

இந்நிலையில் புலிகளின் முன்னாள் தளபதியாகவும், இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சராகவும் இருந்த கருணா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள், வழக்குகள் இருக்கும் நிலையில் அவர் சாதாரண குற்றச்சாட்டினை முன்வைத்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால், கருணா கைது செய்யப்படுவார் என்பதை எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனும் அறிந்திருக்கின்றார் என்கிறார்கள் விமர்சகர்கள்.

நேற்று முன்தினம் திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் விஷேட கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இந்தக் கூட்டத்தில் பேசிய சம்பந்தன் யாரும் எதிர்பார்க்க முடியாத மாற்றம் ஒன்று ஏற்படப்போவதாக தெரிவித்திருக்கின்றார்.

அவர் அவ்வாறு கூறிய அடுத்த நாள். அதாவது நேற்றைய தினம் கருணா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனால் கருணாவின் கைது தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனும் அறிந்திருக்க கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக நம்பப்படுகின்றது.

முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியிருந்தனர்.

இந்நிலையில் கருணாவின் கைதும் இடம்பெற்றிருக்கின்றது. ஜனாதிபதியை சந்தித்த பின்னர் நடந்த முதல் கூட்டத்தின் போது சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தமையே அவரும் இந்த கைது தொடர்பில் தெரிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் என்று கூறப்படுகின்றது.
கருணாவின் கைது குறித்து மேலும் பல அதிச்சி தகவல்கள்! Reviewed by Unknown on 5:45:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.